பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் பத்து

143

கந்தாம் பத்து 143

தன் கோநகர்க்கு எடுத்துச் சென்ருன். வெம்மையான வலிமையின்ையும், இடையருது செய்யும் போரினையும் கொண் டவரான சோழர் குடியினரின் அரசுரிமைக்கு உரியவர் களான ஒன்பதின்மரும் ஒருங்கே பட்டு வீழுமாறு, அவர்களை நேரிவாயில் என்னுமிடத்து நிகழ்ந்த போரிலே வென்று, நேரிவாயில் என்னுமிடத்தே தங்கினன். அச் சோழர் குடியி னரோடு நிலையான நாள்தோறும் செய்யும் போரினைத் தொடர்ந்து செய்து, அவர்கள் தலைவனையும் கொன்ருன். இப்போர்களிலுைம் கெடுதல் இல்லாதே விளங்கிய அரிய படைப்பெருக்க்த்தோடும், கடலும் பின்னிடுமாறு சென்று, அவ்விடத்துப் பகைவரையும் தோற்ருேடச் செய்தான். அச் சிறப்புடைய செங்குட்டுவனைக் கரணம் அமைந்த காசறு செய்யுட்களைச் செய்வோரான பரணர் பத்துப் பாட்டுகளாற் பாடிஞர். + -

சொற்பொருளும் விளக்கமும் : வான்தோய் வெல்கொடி _மிகவுயர்ந்த வெல்லுங் கொடியையுடைய வான்ருேய்: இலக்கண வழக்கு. கடவுள் பத்தினி என்றது கண்ணகியை. கணையின் போகி - அம்பைப் போல விரைந்து சென்று. "ஆரிய அண்ணல் என்றது ஆரிய மன்னருள் தலைவனுக நின்று போரிட்டவணை. மண்ணி என்றது, கொண்ட கல்லை நீர்ப்படை செய்து என்றதும் ஆம். வல்வில் - வலிய விற் ருெழில்: இது ப்ல இல்க்குகளை ஊடுருவிச் செல்லுமாறு கணேயைப் போக்கும் திறன். உறுபுலி - வலிமிக்க புலி. வயவர் . வீர்ர். வியலூர் - இது நன்னன் வேண்மானுக்கு உரியது. நறவு மகிழ் இருக்கை நன்னன் வேண்மான், வயலை வேலி வியலூர்' என்று, இதனை (அகம் 67) மாமூலனர் உரைப்பர். கொடுகூர் வியலூர்க்கு மறுகரையிலிருந்த ஆர்: இவையிரண்டும் ஆற்றங்கரை பூர்கள். 'பழையன் ஒரு குறு ல மன்னன்: பாண்டிய நாட்டு மோகூர்க்குத் தலைவளுக விளங்கியவன். இவனுக்குரிய காவன் மரம் வேம்பு. முரற்சி . திரித்த கயிறு. பெண்டிர், கணவரை யிழந்தபின் வாலிழை கழிப்பர் என்றனர் (15). இதனை, மெல்லியன் மகளிரும் இழை கழித்தனரே எனவரும் புறப்பாட்டடியும் விளக்கும். 'வாலிழை முத்தாரம் என்றும் உரைப்பர்; மங்கல அணியாதலே பொருத்தம். முழாரை - மு.ழ ைவ ப் போன்ற பருத்த அடிமரத்தையுடைய குஞ்சரவொழுகை பூட்டி' என்றது, பழையனின் களிறுகளை, வண்டிகளை இழுக் கும் எருமைக் கடாக்களைப் போலப் பூட்டி என்பதாம்.

ஆராச் செரு செய்து செய்து அமையாத செரு. சோழர்