பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் பத்து

151

ஐந்தாம் பத்து 151

ரோடு அவர் கைக்குடங்களும் ஆடும் என்பதாம். தீஞ்சேறு - இனிதான வண்டற்சேறு, சுவையுமாம். விளைந்த - முதிர்ந்த, மட்டம் - கள். ஒம்பா ஈகை. தனக்கென வையாது பிறர்க்குத் தந்து மகிழும் கொடை. வண்மகிழ் . வளவிய மகிழ்ச்சி. கோடியர் - கூத்தர். கிளை - சுற்றம். ஆடியல் உளை - அசை யும் இயல்புடைய தலையாட்டம். கலி - மனச்செருக்கு. பொழிந்தவை . கணக்கின்றி வழங்கியவை. பாசறைக்கண் அவன் வெற்றியைப் பாடியவர்க்கும், கூத்து நிகழ்த்தி இன்புறுத்தியவர்க்கும், தான் பகைவரிடமிருந்து கைப்பற்றிய குதிரைகளைச் சேரம்ான் அளவின்றி வழங்கினன் என்பதாம்: தன்க்குப் பயன்படும் அவை அக் கூத்தர்க்குப் பயன்படாவென அறிந்தும் அவன் வழங்கியதனல்ே, இதனக் கள்ளுண்ட மகிழ்விலே செய்த ச்ெயலென்று கூறுகின்ருர் போலும்!

மன்பதை மக்கள்; இவர் பகையரசர் நாட்டு மக்களும்: அடுத்திருந்த பிறநாட்டு மக்களும். மருளல். வியப்பால் மயங்கல். கடந்து - வென்று. முந்துவின . முற்படும் வினை: அது பகைவரை அழித்தல். எதிர்வரப் பெறுதல் . மீளவும் வந்தெய்தப் பெறுதல்; வந்த போர்வினை முடிந்ததாதலின், இனி அடுத்துவரும் போரினை எதிர்நோக்கிப் படைஞர் திரண் டனர் என்பதாம். ஒளிறு நிலை உயர் மருப்பு - ஒளி நிலைபெற்று உயர்ந்த கொம்பு. இதனை ஏந்திய களிறுார்ந்து வந்த மான மைந்தர்' எனவே, அவர் குட்டுவனுக்குப் பணிந்து திறை செலுத்தும் மன்னரின் படைத்தலைவர்கள் எனலாம்; இவர் போரில் நேரிற் கலவாது வெற்றியைப் பாராட்ட வந்தவர். மன்னர் . அத் தலைவர்களின் மன்னர்கள். தேரொடு சுற்றம்' என்றது, தேர்ப்படை முதலான பிற படைகளையும். மூய - மொய்த்து நிறைய. மாயிருந் தெண்கடல் . கரிய பெரிய தெளிந்த கடல். மலிதிரைப் பெளவம் - திரை மிகுந்த பரப்பு. குரூஉ - நிறம். பிசிர் . சிறுதுளி. புணரி - அலை. இனி, இது தான் சேரமான் கடலிடைப் பகைவரை அழித்துத் திரும்பிய காலத்து. கரைப்பகுதியின்கண் நின்று அவனையும், அவனுடன் சென்ற படைமறவரையும் பிறர் வரவேற்ற சிறப்பைக் குறிப் பதாகவும் கொள்வர். தெளிந்த கடலின் பரப்பின் மேலாகப் பொங்கியெழும் அலைகள் கரையிற் சென்று மோதிப் பிசிராக உடைதலைப் போலக், கடலிடைத் தீவிலிருந்த வலிய பகை வரும் சேரளுேடு பகைகொள்ள அழிந்து சிதறினர் என்பது மாம். தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம்' என்றது, அக் கடற்பகைவரிடமிருந்து கைப்பற்றிய திராட்சை மதுவுமாக லாம். அவர்கள் படையெடுப்பிற்காகக் கொணர்ந்து சேமித்த