பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் பத்து , 1ου

கொழுப்பு இல்லாத பசிய இறைச்சித் துண்டங்களை வைத்த இடத்தை மறந்துபோன, துய்போன்ற உச்சிக் கொண்டையமைந்த தலையுடைய கூகைச் சேவலைக், கவலை யடையச் செய்தபடி வருத்துகின்ற பெண் கோட்டானை யுடைய இடுகாட்டிடத்திலே, முரசினையுடையவரும், வழி வழித் தொடர்ந்து உரிமைபெற்று அரசுசெலுத்தி வருவோ மான அரசர் பலரை வென்று, அசைவற்ற அலைகளையுடைய கடலாற் சூழப்பெற்ற பரந்த இந் நிலமண்டலத்தை ஆட்சி புரிந்து, இனிதாகத் தம் வாளுளைக் கழித்து இறந்த மன்னரை இட்டுப் புதைக்கும் வன்னிமன்றத்து இடுகாட்டிட்த்தே, தாழியானது, நின் யாக்கையாகிய நோயில்லாத பெரிய உடம்பைக் காணுதொழிவதாக!

ஆயின், நின்னைப் புகழ்ந்த, நின்னைப் பாடும் பாடினியே, மிக்க வலிமை பொருந்தியதும், நோயில் ல்ாததுமான யாக் கையாகிய நின் பெரிய உடம்பினைக காண்பாளாக! எனவே

நீயும் நீடுழி வாழ்க! -

சொற்பொருளும் விளக்கமும் : புடைத்தல் . இடித்துத் தகர்த்தல். ஆர்ப்பு - முழக்கொலி. துடையூ - துடைத்து. நுடங்க - அசைந்தாட அமர்கடந்து போரை வெற்றி கொண்டு. கலம்செல - கலம் பிறரிடத்தே கெல்ல. ஆடுநடை - வெற்றியின் பெருதமித நடை.

"உழிஞை சூடிய அறுகை' என்றது, மோகூரான வெல்லக் சருதிச் சென்ற அறுதை என்றதாம். சென்ற போர்களுள் எல்லாம் வெற்றியே பெற்ற இவன், மோகூராளுேடு போரிட்டபோது தோற்று ஒடி ஒளியவும் நேர்ந்தது என்க. இதனால், அவனே நண்பனுகக் கொண்ட தனக்கும் பழியெனக் காண்ட குட்டுவன், தான் படையோடு சென்று மோகூர் மன்னனின் அரண்களை அழித்து, அவனை வெற்றி கொண் டான், என்பதாம். ' அணங்கு நிகழ்ந்தன்ன” என்றது. எவ் வாற்ருனும் தடுக்கவியலாதபடி நிகழ்ந்த செயல் என்னுமாறு என்பதாம். * * so

கொழுவில் - கொழுப்பற்ற, துணி - இறைச்சித்துண்டு. தலை . இடம். துய்த்தலைக் கூகை - துய்போன்று கொண்டை யைத் தலையிலுடைய கூகைச் சேவல். கவலை கவற்றல் - கவலைப்படவைத்து வருத்தல். தாயம்-வழிவழி வரும் உரிம்ை. துளங்கல் - அசைதல். பறந்தலை - இடுகாடு. தாழி. வாய் அகன்ற மட்பான வன்னி மன்றம் - வன்னிமரம் நிற்கும் மன்றம்; "சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு, மட்ைதி யுறுக்கும் வன்னி மன்றம்' என இதனை மணிமேக ைகூறும்

விளங்கிய