பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

பதிற்றுப்பத்து தெளிவுரை

160 பதிற்றுப்பத்து தெளிவுரை

45. ஊன்துவை அடிசில் !

(துறை : செந்துறைப்பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு பெயர் : ஊன்றுவை அடி சில். இதஞ்ற் சொல்லிப்து செங்குட்டுவனின் வென்றிச் சிறப்பு.

பெயர் விளக்கம் : அரசனுக்குச் சோறுவேறு படைமறவ ருக்குச் சோறு வேறு என்று உணவைப் பிரித்துக் கொள்ளாது அனைவருக்கும் ஒரே சோருக அடப்படும் ஊன்றுவை அடிசில் என்னும் சிறப்பைச் சொல்வதால் இப்பாட்டிற்கு இது பெயராயிற்று.)

பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப் புற்றடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின் நொசிவுடை வில்லின் கொசியா கெஞ்சின் களிறெறிந்து முரிந்த கதுவாய் எஃகின் விழுமியோர் துவன்றிய அகன்கண் நாட்பின் 5 எழுமுடி மார்பின் எய்திய சேரல்! குண்டுகண் அகழிய மதில்பல கடந்து பண்டும் பண்டும்தாம் உள்ளழித்து உண்ட நாடுகெழு தாயத்து நனந்தலை அருப்பத்துக் கதவம் காக்கும் கணையெழு அன்ன 10 நிலம்பெறு திணிதோள் உயர ஒச்சிப் பிணம்பிறங்கு அழுவத்துத் துணங்கை ஆடிச் சோறுவேறு என்ன ஊன்துவை யடிசில் ஓடாப் பீடர் உள்வழி இறுத்து முள்ளிடுபு அறியா ஏணித் தெவ்வர் - 15 சிலைவிசை அடக்கிய மூரி வெண்தோல் அனைய பண்பின் தானை மன்னர் இனியார் உளரோ? கின் முன்னும் இல்லை மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது விலங்குவளி கடவும் துளங்கிருங் கமஞ்சூல் 20 வயங்குமணி இமைப்பின் வேலிடுபு முழங்குதிரைப் பனிக்கடல் மறித்திசி குேரே.