பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

பதிற்றுப்பத்து தெளிவுரை

164 பதிற்றுப்பத்து தெளிவுரை.

கோடுரைல் பெளவம் கலங்க வேலிட்டு உடைதிரைப் பரப்பின் படுகடல் ஒட்டிய வெல்புகழ்க் குட்டுவன் கண்டோர் செல்குவம் என்னர் பாடுபு பெயர்ந்தே|

தெளிவுரை : வண்டினம் மொய்க்கும் கூந்தலான முடியைப் புனைந்தோரான பாண்மகளிர், இழைகளையும், குழைசளையும், நறுமணங்கொண்ட குளிர்ந்த மாலைகளையும் அணிந்தோராகவும், ஒளிமிக்கதாய் விளங்கும் வளையல்களைச் செறித்த முன்னங் கையினராகவும், ஒளிக்கதிர்களை மிகவும் உமிழ்கின்ற அழகிய மணிகள் பதித்து விளங்கும் மாலை புனைந்த மார்பினராகவும் வந்து, நரம்புத்தொடையினை யுடைய பேரியாழினிடத்தே பாலைப்பண்ணை அமைத்தவராகப் பகைவர்க்குப் பணியாத மரபினையுடைய உழிஞைத்திறனைப் போற்றிப் பாடுவர். அவர்கள் பாடலைக்கேட்டு, இன்முகத் தோடு அவர்ளுக்குப் பரிசிலளித்துப் பேணியவாறு, இனிய கள்ளேயும் அவர்களுக்கு வழங்கி மகிழ்பவன்; s

சுரநெறிகள் பலவற்றினும் செலுத்தப் பெறும், முன்னர்க் களங்களிற் சென்ற காலத்துக் குருதிக்கறை சோய்ந்த விளிம்பைக் கொண்ட தேர்ச்சக்கரங்கள், தாம் செல்லுங்காலத்தே எண்ணிலடங்காப்பகைமறவர் தலைகளைக் கீழ்ப்பட்டு நசுங்குமாறு செல்லப், பல போர்களை நிகழ்த்தி வென்ற, பகைவரைக் கொல்லும் இயல்பு உடைய களிற்று யானைகளை உடையவன்;

சங்கினம் முழங்குகின்ற கடலானது கலங்குமாறு வேற் படையைச் செலுத்தி, உடைந்தலையும் அலைப்பரப்பையுடைய ஒலிகடலிடத்தேயிருந்து பகைத்தோரைத் தோற்ருெடச் செய்த வெற்றியால் உளதாகிய பெரும்புகழுடையவன் செங்குட்டுவன். அவனைப் பாடிச் சென்று கண்டோர், மீண்டும் மற்றெவர்பாலும் செல்லோம் என்பதையே எண்ண மாட்டார்கள். (அவர்கள் நிரந்தரமாக வாழுமளவுக்கு அவன் பெரும் பரிசில்களை நல்குவான் என்பதாம்.)

சொற்பொருளும் விளக்கமும் : இழை . அணிகலன்கள். குழை - காதணிகள். நறுந்தண்மாலை . நறுமணமும் தண்மை யும் கொண்ட பூமாலை. சுடர் நிமிர் அவிர் - ஒளிமிக்குப் பரவும். திறல் - நிறமான ஒளி: மணி - செம்மணி. மகளிர் . பாடினியராகிய பாண்மகளிர். பணியா மரபு - பகைவர்க்