பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

பதிற்றுப்பத்து தெளிவுரை

166 . பதிற்றுப்பத்து தெளிவுரை

மீளவும் அவன் எஞ்சிய பகைவரைப் பொருது அழித்தலி லேயே ஈடுபடுவான். அங்ங்ணம் அவன் தான் பொருதுந் தோறும், அவன் களத்தைப் பாடிச் சென்றவரான பரிசிலர் களிறுகளையே பரிசிலாகப் பெற்றனர்.

மலையின் மேற்பகுதியினின்று வீழ்ந்தொழுகும் அருவியைப் போல, மாடங்களின் மேற்பகுதிகளிலிருந்து காற்ருல் அசைந் தாடும் கொடிகள் தாங்கும் தெருவினிட்த்தே, சொரிதற் குரிய சுரையைக் கொண்டிருக்கும் திரிக்குழாய், நெய்யானது கரையிடத்தே நிரம்பி மேற்புறமாக வழிந்து பரவுதலாலே, காலையுடைய விளக்கைப்பேர்லப் பருத்துள்ள நெருப்புச் சுடரினை எரிய விடுவதாயிருக்கும். அழகிய நெற்றியுடையவ ரான விறலியர், அவ்வொளியிலே ஆடுகின்ற ஆடரங்கத்தை யுடைய பழைதான மாளிகையிடத்தே எங்கணும், அவனைப் பற்றிய புகழுரைகளே மிகுதியா யுள்ளனவே!

சொற்பொருள் விளக்கம் : செங்குட்டுவன் போர் வினை யிலே ஈடுபாடும், தன் பகைவரை முற்றவும் ஒழித்தலிலே கருத்தும் கொண்ட மறமேம்பாட்டினன் என்றது. இது. இதனேயே, -

ஐயைந்து இரட்டி சென்றதற் பின்னும் அறக்கள் வேள்வி செய்யாது யாங்கனும் மறக்கள வேள்வி செய்வோய் ஆயின!

எனச் சிலம்பும் கூறுகின்றது (கா. 28. 130-32). மாடம் களின் மேலாக அசைந்தாடும் கொடிக்கு வரைமிசை வீழும் அருவியை உவமித்தலை, "வேறு பல் துகிலின் நுடங்கி, இழு மென இழிதரும் அருவி' எனத் திருமுகாற்றுப்படையினும் w;rregyswrrib. t;

ைைர உட்டுளை. 'பருஉச்சுடர் அழல என்றது, இடப் பெற்ற திரியின் அளவைக் கடந்து, சுரை கடந்து மேலே வரவிய நெய்யினும் பற்றிப் பெருஞ்சுடராக எரிதல்.

தொன்னகர் - பழைதான மாளிகைகள். விறலியர் ஆடும் தொன்னகர் வரைப்பு என்றது, அவன் வென்று கொண்ட பகைமன்னர் அரண்மனையிலே, அவனைப் போற்றிக் கொண்டாடும் வெற்றிவிழாச் சிறப்பைக் கூறியதாகும்.