பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பதிற்றுப்பத்து தெளிவுரை

கடலுள்ளும் சென்று, கடலிடத்திருந்து தொல்லை தந்தாரான பகைவரோடு அரிய போரைச் செய்த, குளிர்ந்த கடற்றுறை யினை உடையவனாகிய, பரதவனே!

அக் கடலிடத்தே, கொள்ளையிட்டு அவர் சேர்த்து வைத்திருந்த பொருள்களை எல்லாம் இவ் வி டத் தே கொணர்ந்தன. கொணர்ந்து இவ் விரவலர்களின், நின்புகழ் முழுதையும் தம்முள் அடக்கிக் கொள்ளாத பாட்டிற்குரிய பரிசிற்பொருளாக அவற்றை மிக எளிதாகக் கொடுத்தனை. "அங்ங்னமாகக் கொடுக்கும் இச் செங்குட்டுவன், வரும் பரிசிலரது தகுதிகளை ஆராய்ந்து அவற்றுக்கேற்பப் பரிசில் அளிப்பதென்பதனைக் கல்லாத வாய்மையாளன்' எனத் தம் இசைத்தொழிலிலே வல்லாரான இசையாளர்கள் பாராட்டிய வராகத் தங்கள் கைகளை வரிசையாக நீட்டுவர்.

ஆன்ருேர்க்கு வணங்கிய மென்மையினையும், பகைவர்க்கு வணங்கியறியாத ஆண்மையினையும், பகைப்புலத்துப் போர் முனைப்படும் ஊர்களை எரித்தலாலே எழும் மிக்க தீயழல் எரித்ததாலே, இதழது அழகனத்தும் பெரிதும் கெட்டழிந்த மாலையோடு சாந்தமும் காய்ந்துபோய்ப் பல பொறிகளாக விளங்கும் மார்பினையும் உடையவனே! 證

நினக்கு உரியதான மலையிடத்தே தோன்றி, நின் கடலிடத்தேயே சென்று கலக்கும் ஆற்றின்கண், மிக்கபுனல் வருங்காலத்தே நிகழ்த்தப்பெறுகின்ற இனிய புனலாட்டு விழவினிடத்தே, பொழிலிடத்தே தங்கியிருந்து வேனில் விழாக்கொண்டடும் பேரழகினையுடைய இல்வாழ்க்கையினை நீ உடையை! அவ் வாழ்க்கைக்கண்ணே விரும்பிச் சூழ்கின்ற சுற்றத்தாரோடும் கூடியிருந்து உண்டு, இனிதாக நுகரும் இயல்பும் உட்ையை! இனிதான புனலிடத்தே ஆய மகளிர் விளையாடியபடியிருக்கும் காஞ்சியென்னும் ஆற்றின் பெருந்துறைக்கண் பரந்து கிடக்கும் மணலினும் பல்லாண்டு கள் நீயும் வாழ்வாயாக, பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும் : பைம்பொன் - பசும்பொன். பைம்பொன் தாமரை - பசும் பொன்னலாகிய தாமரைப் பூக்கள். பாணர்ச் சூட்டி - பாணர்க்குப் பரிசிலாக அணி வித்து: இஃது இக்காலத்து மெடல்' அணிவிப்பதுபோன்று அணிவிக்கும் சிறப்பாகலாம். ஒண்ணுதல் விறலியர் - ஒளி யுடைய நெற்றியினரான விறலியர்; நெற்றி ஒளியுடைய