பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் பத்து ##9

தென்றது அவர்தாம் நல்லழகினையுடையவர் என்பதற்காம். ஆரம் - பொன்னரி மாலை: இதுவும் பரிசிலாகத் தருவது. கெடலரும் பல்புகழ் - கெடுதலில்லாத பலவான புகழ்கள்: அஃதாவது பொய்மையான புகழ் அன்று என்பதாம். நிலைஇ நிலைபெறுத்தி. நீர் புக்கு - கடலுள் சென்று. கடலோடு உழந்த” என்றது, கடற்கண் தொல்லை தந்த பகைவரோடு ப்ோரிட்டு வென்ற என்றதாம். பனித்துறை. குளிர்ச்சியான கடற்றுறை, தாரம் . செல்வம்; இது அப் பகைவரிடமிருந்து அவரை வென்று கைப்பற்றிய பல பொருள்கள். கொள்ளாப் பாடல் - புகழை முற்றவும் கொண்டிராத பாடல்: பொருட் செறிவு இல்லாப் பாடலும் ஆம்; இசையோடு பொருந்தாத பாடல் எனினும் பொருந்தும். கல்லா தரமறிந்து பிரித்துப் பரிசில் தருதலை அறியாத நிலை; தனக்கெனப் பேணி வைத்துக் கொள்ளாத நிலையும் ஆம். வாய்மை . உள்ளத்தை மறைக் காத தன்மை. 'கை நேர் நிரைப்ப . கைகளை வரிசை வரிசை யாக நீட்ட பரிசில்ர் அத்துணைப் பெருந்தொகையினர் என்பதாம். * வணங்கிய சாயல் . பணிந்த மென்மை; பணிதல் ஆன்ருேர் மாட்டும், சிறந்த நட்பினர் மாட்டும் என்க. முனை - போர்முனை, கனையெரி - கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு. இதழ் . பூவிதழ்; குட்டுவனின் மார்பினிடத்து மாலையிலுள்ள பூதவிழ்கள். சாந்து - சந்தனம். பொறி - பொறிந்த சாந்தம். ஊரழலின் வெப்பத்தாலே மார்பின் சாந்தம் காய்ந்து பொறிப்பட்டு உதிரலாயிற்று என்க. நின் மலை . நினக்குரிய மலை; நின் கடல் - நினக்குரிய கடல்: எனவே, இடைப்பட்ட நிலமும் நினக்கு உரியதென்றனர். தீநீர் விழா - இனிதான் புதுப்புனல் விழா. சுற்றம்' என்றது, அரசியற் கருமத் தலைவரும் அகவாழ்வுத் துணைவியும், பிறருமாகிய சுற்றத்தினரை. இனிது நுகரும் என்றது, பொருள் தான் செலவழிதலைப் பற்றிக் கருதாது, அவ்வாறு செலவாதலிலே இனிமைகண்டு நுகரும் என்றதாம்; இஃது அளவற்ற வளனுடைமையைக் குறிப்பதாகும். காஞ்சியம் பெருந்துறை - காஞ்சியாற்றின் பெரிய . நீர்த்துறை: இவ் யாறு இந்நாளையக் கொங்கு நாட்டுப் பேரூர்க்கருகில் செல் கிறது; நொய்யல் என்னும் பெயரையும் கொண்டுள்ளது. ஆசிரியர் பரணர் செங்குட்டுவன வாழ்த்தும்போது, நிவந்து கரை யிழிதரு நனந்தலைப் பேரியாற்றை'க் குறிப் பிடாமல், காஞ்சியாற்றைக் குறிப்பதற்குக் காரணம்

ஏதேனும் இருத்தல் வேண்டும்; இது சிந்தித்தற்குரியது.