பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் பத்து

171

ஐந்தாம் பத்து ፳፻፫

செல்லும்; விளங்குங் கொடிகள் அசையச் செல்லும் தேர்கள் வழியின் தன்மைக்கேற்ப விலகிச் சுழன்றபடியே செல்லும்: வேற்பட்ை செலுத்தியபடி போர் எழுச்சி மேற்கொண்டு வருகின்ற பகையரசரது முன்னணிப் படையினது, இருபக்க மாகவும் வரும் பக்கப்படைகளைப் பொருது அழித்து வெற்றி கொள்ளும், கடுமையான தூசிப்படையினைக் கொண்டவர்; இத் தகையரான, போர்க்களங்களிலே வெற்றி யொன் றனையே பெறுகின்றவரான மறஞ்சிறந்த இருபெரு வேந் தரும், வேளிர்குலத் தலைவர்களும், தம்முள்ளே அறுகையை வெற்றி கொள்ளுதலாகிய ஒன்றையே கூறியபடி, தம் படை யணிகளுடனே ஒன்றுபட்டு வந்தனர். மிகுதியான அப்படைப் பெருக்கின் வலிமையிஞலே செருக்குடையவளுக, அவரோடு தானும் கூடியவகை வந்தனன் மோகூர் மன்னஞகிய பழை வன்; அப் பழையனின், வெற்றியைத் தரும் படைமறவர் கூட்டமெல்லாம் கலந்து சிதையுமாறு, நெருங்கித் தாக்கி அழித்தவன் செங்குட்டுவன்.

பகைவரை எறிந்து மீளப்பறித்த வேற்படைகளை ஏந்தி வருதலாலே, குருதியளைந்த சிவந்த கையினராக வரும் படை மறவருடைய, மார்பிற்பட்ட புண்களிலிருந்து வழியும் குருதி யானது. அப் போர்க்களத்தின் நிலத்திற் பர்வி ஓடியது: மழைநாளிற் செல்லும் புனலொழுக்கைப்போலப் பள்ளங் களிற் பரந்து அக் குருதிவெள்ளம் செல்லலாயிற்று: பட்டு வீழும்மறவர் பிணங்கள் எப்புறமும் குவிந்தன; பலவற்றையும் அவ்வாறு பாழ் செய்தான் குட்டுவன்; ஒலிக்கின்ற கண்ணே யுடைய அவனுடைய வெற்றிமுரசமானது போர்க்களத்தின் நடுவிடத்தேயிருந்து வெற்றியை அறிவித்தபடி முழங்கத் தொடங்கியது; பகைத்துவந்த அப்பழையனது படைவளம் ஆ அழிந்தது; இருந்து வாழ்தற்குரியவரான இளமை காண்ட மறவர் பலரும் அக்களத்திற் பட்டு வீழ்ந்தனர்; மேலும், அப் பழையன்மேற்சென்று, அவன் நாட்டுட்புகுந்து அவனுக்குரிய காவல் மரமான கரிய கிளைகளையும் வன்மை யினையுமுடைய வேம்பினையும் செங்குட்டுவன் வெட்டி வீழ்த் தின்ை; அத்தகைய பெருஞ்சினத்தைக் கொண்டவன் செங்குட்டுவன். அவனைக் கண்டு வருவதற்காக

அசைந்தபடி தொங்கும் கூந்தலையும், அஞ்சுகின்ற இயல் பையுமுடைய விறலியரே! யாமும் அவன்பாற் செல்கின்றேம்: ரீவிரும் அவனிடத்தே வருக. பாடலின் வன்மையாலே வாழும் வாழ்க்கை நெறியினையுடைய நும் கூட்டத்தவர். இனிதாக உண்டு களிப்பாராக!