பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் பத்து

175

ஐந்தாம் பத்து 175

போரிற் பகைவரைக் கொல்லும் இயல்புடையவான களிறுகள் பரந்த கடலலைகளைப்போல அசைந்துவரும்; வலிய வில்லாகிய படையினைக் கொண்டோர், அவ்அலைகள் உடைந்து சிதறும் துளிகளைப்போல நாற்புறமும் பரவுவர்: உயர்ந்த தோற்கிடுகின் விளிம்பின் மேலாக வேற்படையாகிய மீன்கள் ஒளி செய்தபடி விளங்கும்; இவற்றின் ஆரவாரத் தோடு கலந்தெழும் நின் போர்முரசத்தின் ஒலியைக்கேட்டுப் பகையரசர் அஞ்சுவர். அஞ்சிய அவர்கள் நின்னைப் புகலாக வந்தடைவர். அவர்கட்கு நீயும் அரணுக விளங்கி, அவர் களைக் கர்ப்பாய். பகைவர்க்கு அச்சந்தரும் நின் தூசிப்படை யாகிய வெள்ளமானது, மலையிட்த்தும் கடலிடத்தும், பிற விடத்தும் உள்ளவான அரண்களிடத்தே பொருந்திய போர்களை வெற்றி கொள்ளும். உட்குப் பொருந்திய மறவர்களை யுடைத்தாயிருந்த அந்நாடுகளைக் கைப்பற்றும். இவ்வாருக நின்னைப் பகைத்தோரது நல்ல புகழனைத்தும் கெட்டழியுமாறு, நீதான் அவரையழித்து, அவரது சினத்தை முற்ற அவியுமாறும் செய்தன. +

ஆதலினலே, மார்பில் பூசிய சந்தனம் புலருமாறும், நெற்றித் திலகமும் கண் மையுமாகிய வண்ணங்கள் துடைக் கப்படவும், பலவகையான அழகுபொருந்திய கோடுசளைக் கொண்ட வண்டினம் ஒலிக்கும் நின் மார்பிற்ை பிணிக்கப் பெற்ற மகளிரது, விரிந்த மெல்லிய கூந்தலாகிய மெல்லணை யிலே தங்கி வருந்துகின்ற காமமாகிய நோயை நீக்கும் பொருட்டாக, அவரது மார்பைச் சேர்ந்திருக்கும் கூட்டத் தால்ே இராப்பொழுதைப் பயன்கொள்ளும் முறைமையி ஞலே உண்டான மெல்லிய சிறு துயிலானது, நீங்குவதற்கு நாள் எவ்வளவு பலமாகக் கழியுமோ, பெருமானே!

பலவான நாட்களும் பாசறையிடத்தேயாகத் தங்கி யிருத்தலாலே, சங்கு முழங்கும் முழக்கமும், பிற கருவிகள் எழுப்பும் இசை முழக்கமும் எழுப்பும், பெருமைபொருந்திய படையாகிய செல்வத்தின்பால் பழகிய நின் கண்கள், ப்கைவ ரிடத்தே உண்டாகிய சினமிகுதியினலே, உறங்குதல் அரி தாகிப் பொருந்திய சிறுதுயிலை.மேற்கொள்ளலும் இயலாது. சொற்பொருள விளக்கம் : மாமலை - பெருமலை; கருமலையும் ஆம். முழக்கம் - இடிமுழக்கம். பனிப்ப - நடுங்க இடியோ சையாலும், மழை நீரால் உண்டான குளிராலும் நடுங்க. கால் - காற்று. 'கான் மயங்கு காட்டிடமெல்லாம் இடம் தெரியாவாறு மயக்கத்தைச் செய்ய' எனலும் ஆம்; பெரு