பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

பதிற்றுப்பத்து தெளிவுரை


பெற்ற பசுமையான மாலை விளங்கும் மார்பகத்தைக் கொண்ட்வன்; .

எதலுைம் கெடாத வரம்பெற்றவராகிய அவுணரது திரிபுரக் கோட்டைகளுக்கு எரியினை ஊட்டியழித்த வில்லினை ஏந்தியவன்; செறிந்த இருளையுடைய யுகாந்தகாலப் பேரிரு ளிலே, சுடுகாட்டை விரும்பியவளுக, அங்குநின்றும் ஆடிய ஊழிக்கூத்தை யுடையவன்;

நெடிய முதுகுப் புறத்திலேயும் தாழ்ந்து வீழ்ந்தபடி அதனையே மறைத்துக்கொண்டிருக்கும் தாழ்ந்த செஞ்சடை யினை உடையவன்; வெண்மையான மணிகள் தொடைப் பக்கத்தே மோதி ஒலிக்கின்ற ஆடல் விழவினைக் கொண் டவன்;

நுண்ணிய நூலாற் கட்டப்பெற்ற உடுக்கை என்னும் துடியினை மாறிமாறி ஒலித்தபடியிருக்கும் விரலினைக் கொண் டவன். ஆணும் பெண்ணுமாகிய சிவசக்தி என்னும் இரண்டு உருவமும் ஒன்ருகி ஒருருக் கொண்டோகைத் திகழ்ந்து, அதற்கேற்ப இருவகை அணிகளாலும் அழகுபெற்று விளங்கும் அழகிய உருவினன்;

வளர்கின்ற இளம்பிறை சேர்ந்திருக்கும் நுதலையுடைய வன்; களங்கனியும் மாருக நிறத்தாலே ஒவ்வாதபடி கருமையை ஏற்று விளங்கும் கருமைக்கறை பொருந்திய கழுத்தைக் கொண்டவன்;

தெளிந்த ஒளியையுடைய குலப்படையைத் தன் திருக்கரத்திலே தாங்கியும்,மற்றும் ஒளிசிதறும் படைகளையும் தாங்கியும் விளங்குபன்; அவனே காலக்கடவுளாகிய சிவ பெருமான்! அவனுக்கு வெற்றியானது நாளும் நாளும் மிகுதி யாக உயர்வதாக!

சொற்பொருளும் விளக்கமும் : எரி - எரியும் தி:செம்மை நிறத்தைக் கொண்டது. "உயர்க மாவலனே' என வென்றி வாழ்த்தாக முடியும் இச்செய்யுள் "எ" கரத்திலே தொடங்கி ’ஏ காரத்திலே முடிகின்றது. வழிபாட்டிலே 'எரி'யோ எரிசுடரோ கொண்டு.தொடங்குவது மரபு. அது கட்டவே