பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1ሃ8 - பதிற்றுப்பத்து தெளிவுரை

மழை பொழிதலால் காட்டின் பகுதிகளை அறிந்துணர இயலா வாயின என்க. வளங்கெழு சிறப்பு' என்றது பிறவாகிய வளங்களை; இவை மலைபடுபொருளும், காடுபடுபொருளும், கடல்படு பொருளும் ஆகியன; நாடுபடு பொருளைக் கரும்பமல் கழனிய நாடு விளம் பொழிய எனத் தனித்துக் கூறியது, அதுவே சிறப்பானது என்பதல்ை. செங்குணக்கு - நேர் கிழக்கு. கலுழி - கலங்கல். பூவிரி புனல் - பூக்களால் வேயப்பெற்ருற்போல வரும் புதுப்புனல். கூடல் - காவிரி யும், குடவருைம், ஆன்பொருநையும் கூடுமிடம்: இதனே முக்கூடல் என்பர்; இங்கே பழைதாகிய சிவாலயம் ஒன்று உளதென்பர் டாக்ட்ர். உ. வே. சா. காவிரியல்லாமலும், மூன்றுடன் கூடிய கடலை ஒப்பாவாய் என்பதாம்.

உரவு - வலிமை. பிசிர் . சிறுதுளி, பண்ணை - முரசம். தார் . தூசிப்படை. கல் - மலை. உருத்தல் - உட்குப் பொருந் தல்; செங்குட்டுவனின் படைப் பெருக்கத்தை இவ்வாறு வெள்ளத்திற்கு ஒப்பிடுகின்றர் பரணர். மலையையும் கடலை யும் பிறவற்றையும் அரண்களாகக் கொண்டு செருக்கியிருந்த பகைவரையும் வென்ருன் என்றனர். ஆள் - போர் வீரர். நல்லிசை - நல்ல புகழ் பண்டு பெற்ற வெற்றிப் புகழ்; அது தான் செங்குட்டுவனைப் பகைத்தாலலே அழிந்ததென்பர். 'நல்லிசை இரிய' என்றனர். உருப்பு - வெப்பம்; இவ்விடத்து வெகுளிக்கு ஆயிற்று.

சாந்தம் புலர்தலும், வண்ணம் கலைதலும், வனப்பு அழி தலும் புணர்ச்சிக்கண் இயல்பாம்; ஆதலின் அவற்றைக் கூறினர். கூந்தல் மெல்லணை - கூந்தலாகிய மெல்லணை. சிறு துயில் - டெல்லிய உறக்கம். மென்பிணி' என்றது, புணர்ச்சி யெல்லைக்கண், அப் புணர்ச்சி கலையலானே வந்த சிறு துயிலை. சண்ணைப் பூவென்னும் நினைவினய்ைப் பிணிய விழவெனப் பூத்தொழிலாற் கூறினன் என்றும் கூறுவர்.

பன்னாள் - பலவான நாட்கள். மரீஇ தங்கியிருந்து. கோடு - சங்கம். பீடு . பெருமை. சிறுதுயில் - மென் துயில். வெம்மை - சினத்தீ. பாடரிது இயைந்த சிறு துயில்’ என்றது, இராப் பொழுதெல்லாம் பகைவரை வெல்வதன் பொருட்டாக உள்ளத்திற் சென்ற சூழ்ச்சியின் முடிவிலே அரிதாகப்படுதல் பொருந்திய சிறுதுயில்’ என்றதாம். தார்ப் புனலை ஒன்னர் உருப்பற நிரப்பினை" என எடுத்துச் செலவினை மே லி ட் டு க் கூறினமையால், வஞ்சித்துறைப் பாடாண்

ஆயிற்று.