பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் பத்து

179

ஆரும் பத்து i.79

கபிலை - கயிலை நிறம் : சாம்பல் நிறம். மழவர் . மறக் குலத்

தோருள் ஒரு சாரார் தகடுர்ப் பகுதியுள் இருந்தவர். நயன்

னிமை. புரந்தரல் - காத்தல்.

+ 'பார்ப்பார்க்குப் பசுவும் ஊரும் அளித்தான்' என்றது,

ஆரியக் கள்வரைக் கொன்றவனேனும், ஆரியப் பார்ப்பாரும்

தன்னை இரந்து நின்றவிட்த்து, அவருக்கு வாழ்வளித்துப்

பேணிய கருணையாளனும் இவனுவான் என்றதாம்.

குடிபுறங்காத்தல் எவ்வாறு அமைதல் சிறப்பு என்ப தனக், குழவி கொள்வாரின் குடிபுறந் தந்து' என்னும் பண் டையத் தமிழக மன்னரது அரசியல்நெறி நன்கு விளக்குவ தாகும்.

51. வடுவடு நுண்ணயிர் !

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந்துக் கும் வஞ்சித் தூக்கும். பெயர் : வடுவடு துண்ணயிர். இதனுற் சொல்லியது , சேரலாதனின் மென்மையும் வன்மை யும்.

(பெயர் விளக்கம் : தாங்குநர் தடக்கை யானைத் தொடிக் கோடு துமிக்கும்’ என்று, எதிர்ப்படை மறவர்மேற் போருக்குச் செல்லுதலைக் கூறினமையால், இஃது எடுத்துச் செலவின் மேற்ருய் வஞ்சித்துறைப் பாடாண் ஆயிற்று.

"அரவழங்கும்' என்பது முதலாக இரு குறளடியும், 'பந்தரந்தரம் வேய்ந்து' என ஒரு சிந்தடியும், சுடர் நுதல்’ என்பது முதலாக இரண்டு குறளடியும், மழை தவழும்' என்பது முதலாக நான்கு குறளடியும் வந்தமையின் வஞ்சித் தூக்கும் ஆயிற்று' என்று பழையவுரை கூறுகின்றது.

வடுவை மாய்க்கும் நுண்ணயிர்' என்று கூறிய சிறப்பால் இதற்கு, வடுவடு நுண்ணயிர்' என்பது பெயராயிற்று.)

துளங்குநீர் வியலகம் கலங்கக் கால்பொர விளங்கிரும் புணரி உருமென முழங்கும் கடல்சேர் கானல் குடபுலம் முன்னிக் கூவல் துழந்த தடந்தாள் நாரை குவியினர் ஞாழல் மாச்சினைச் சேக்கும் 5