பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

பதிற்றுப்பத்து தெளிவுரை

182 啤 பதிற்றுப்பத்து தெளிவுரை

இன்ப நாட்டத்தினளுதலின், வெற்றி கொள்வதற்கு எளியன் போலும்!' என்றும், நின்னைச் சரியாக உணராதோர் நின்னைக் குறித்து நினைப்பார்களோ?

( உள்ளுவர் கொல்லோ நின் உணராதோர்' என ஐயத்தை எழுப்பி, அவ்வாறு உள்ளார் என்பாராக, அவனது மறமாண் பைத் தொடர்ந்து கூறுகின்றனர்.)

மேகங்கள் தவழ்கின்ற பெரிய மலையினிடத்து வாழும் நஞ்சையுடைய பாம்புகளைத் தாக்கி அச்சமுறச் செய்து கடுஞ் சினத்தைக் கொண்ட அவற்றினது வலியை அழிக்கும், பெரிய முழக்கத்தையுடைய இடியேற்றை ஒப்பவன் நீயாவாய்!

போர்க்களத்தே தம்மை எதிர்த்தாரது புெரிய கைகளை யுடைய யானைகளின் தொடியணிந்த கொம்புகளை வெட்டி வீழ்த்தும் வாளினைக் கையேந்திய வெற்றி மறவர்கள், நின் படையாக அமைந்து, அதன் மூலமாக வாழ்க்கை நடத்து வோராவர். -

பனையின் வெண்மையான தோட்டினுலாகிய கண்ணி யைப் புனைந்திருந்தும், அதுதான் பகைவரைக் கொல்லுர்காலத்தே பாய்ந்த குருதியால் தன் நிறம் செந்நிறமாக ஒேயிறு பட்டு, நின் மறத்தன்மையொடு பொருந்தித் தோன்ற விளங் கும் கண்ணியை உடையையாயிருப்பாய். அதனை ஊன்துண்ட மெனப் பிறழக்கருதிய பருந்தொன்று, அதனைக் கவர்தற் குரிய சாலவளவை அளந்தபடி வட்டமிட்டபடி யிருக்கும். நின்னல் தூவப்பெற்ற கணகள் கிழித்த கரிய கண்ணே யுடைய பகைமறவரின் தண்ணுமைகள, அவற்றை முழக்குந் தொழில்வல்ல இளைஞரின் கையால் அறையப்படுதலின்றி ஒழிந்துபோழ். ஏனையோரால் மாற்றற்கரிய சீற்றத்தைக் கொண்ட மிகப்பெரிய கூற்றமானது, உயிர்களைக் கவரு வதற்கு வலைவிரித்தாற்போல, நின் பார்வையும் அப்பகை வரை நோக்கிச் செல்லும். நெடுந்தகையே! போர்க்களத் திலே, நீதான் எத்துணைக் கடுமையாக விளங்குகின்றன!

சொற்பொருள் விளக்கம் : துளங்கு நீர் - அசையும் நீர். வியலகம் - பரந்த நீர்ப்பரப்பு. கலங்குதல் . மேல்கீழாகக் கலங்குதல். சால் - காற்று. பொர - மோதியடிக்க. இரும் புணரி - பெரிய அலைகள். உரும் . இடி. கானல் - கானற் சோலே. குடபுலம் - மேலைக்கரை நாட்டுப் பகு தி. முன்னி . அடைந்து. கூவல் - பள்ளம், துழந்த - துழாவய. ஞாழல் . சுரபுன்னை. மாச்சினை . பெரிதான கிளை. சேக்கும் . தங்கும்.