பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

பதிற்றுப்பத்து தெளிவுரை

184 பதிற்றுப்பத்து தெளிவுரை

நிறம் மாறுபடுதல். ஊறு அளப்ப உறுதற்கான கால வளவை ஆராய துரகண - தூவும் கணகள். மாக்கண் - கரிய கண்ணிடம். கைவல் . தொழிலில் வல்லவரான். கையலை அமுங்க - கையால் அறையப்படுதலற்று ஒய்ந்து போக. மாயிரும் கூற்றம் - கொலைத் தொழிலிலே மிகப் பெரிய வன்மையுடையதான கூற்றம். வலைவிரித்தல் - உயிர்ப் பறவைகளைப் பற்றற்கு வேடன் புள்ளினத்தைக் கவர வலை விரித்தான், கூற்றுவன் உயிரிகளை ஒருங்கே கவர வலை விரித்தாற்போல என்க. நேர்க்கலை- நோக்கத்தை உடையை, முற்றெச்சம். நோக்கமே வலையாயிற்று; அதன் எல்லேக் குட் பட்ட பகைவர் தப்புதல் அரிது என்பதும் ஆம்.

52. சிறு செங்குவளை !

துறை : குரவைநிலை. வண்னம்: ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : சிறு செங்குவளை.

(பெயர் விளக்கம் : "அவள் நின்று நின்னை எறிதற் பொருட்டாக ஒக்கிய சிறு செங்குவளை எனக் கூறிச், சிறு' என்னும் சொல்லால், அவளது மென்மைத் தன்மைய்ை நுட்பமாகப் புலப்படவைத்த சிறப்பால், இப் பாடல் இப் பெயரைப் பெற்றது.

இதனுற் சொல்லியது : சேரலாதனின் கைவண்மையும், வென்றி மேம்பாடும் அவற்ருேடு இணைந்த இன்பச் செவ்வி யும் ஆம். *

துணங்கையாடுதல் காரணமாகப் பிறந்த ஊடலின்

பொருளைத் கொண்ட பாட்டு இது. ஆதலால் துறை குரவை நில ஆயிற்று.)

கொடிநுடங்கு கிலைய கொல்களிறு மிடைந்து வடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பி அருங்கலந் தரீஇயர் நீர்மிசை கிவக்கும் பெருங்கலி வங்கம் திசைதிரிந் தாங்கு மையணிந்து எழுதரு மாயிரும் பல்தோல் மெய்புதை அரணம் எண்ணுது எஃகுசுமந்து முன்சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்