பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்து தெளிவுரை

15


இது 'எரி எனத் தொடங்குகின்றது. பயில்தல் - செறிதல். வெண்மணி - பளிங்குமணி. சிரந்தை - சிரற்பறவைச் சிறகு போல அசையும் உடுக்கை. இரட்டுதல் - மாறி மாறி ஒலித்தல். ஈரணி . இருவகை ஒப்பனை: அது, சக்தியும் சிவமுமாக, பெண் ஆளுகச் செய்யப் பெறும் வேறுவேருன ஒப்பனைகள். காலக் கடவுள் - காலங்கடந்து நின்று காலத்தை யும் வகுக்கும் மூலமுதற் கடவுள். சிவனை ஈமக்காட்டின் இறையாக இன்றும் போற்றிவரும் தென்பாண்டி மரபை யும், சமாதி மேலாகச் சிவலிங்கம் நிறுவும் தொடர்ந்த நாட்டு வழக்கையும் இங்கே கருதுக.

சிவபிரானது செம்மேணிவண்ணமும், அளவில் ஆற்றலும், அவன் கூத்தியற்றும் அற்புதப் பாங்கும், அவன் சக்தி யோடும் கலந்திருக்கும் அந்தத் தனித்தன்மையும், அவன் அருளின் செவ்வியும், பிறவும் கூறி வியந்து போற்றுகின்றனர்.

'எரியையும் எள்ளுவது போன்ற நிறம் என்றது, எரி நெருப்பினுங் காட்டில் செம்மையும் வெம்மையும் ஆற்றலும் ஒளியும் கொண்டதான செம்மேனி வண்ணம் என்றதாம்.

அந்தத் திருமேனி உடையானின் திருமார்பிடத்தே கொன்றைப் பைந்தார் அழகுசெய்தபடி விளங்கும் என்றது, அவனது தண்மையையும் அழகுணர்வையும் நினைந்து மகிழ்ந்த தாம். *.

'பொன்ருர் எயில் எரியூட்டிய வில்லன்' என்றது, அடிய வர்க்கு அமைந்து அடியவனகி அவர்க்கு ஊறு இழைப்பாரின் ஆணவத்தை தீய்த்தொழிக்கும் சினத்தோடு செயற்பட்டு அருளுகின்ற உளப்பாங்கும் உடையவன் என்று கூறியதாகும். 'பயிலிருள் காடமர்ந்து ஆடிய ஆடலன் என்றது. சர்வ சங்கார காலத்துப் பேரிருளில் அனைத்தையும் ஒடுக்கி யாடு கின்ற ஊருப்பெருங்கூத்தின. இது, அவனே அனைத்துக்கும் ஆதியும் அந்தமும் ஆனவன் என்பதனையும், அனைத்தும் அவன் அருள்விளக்கமே என்பதனையும், அவன் அழிக்கத் திருவுளம்