பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் பத்து

187

ஆரும் பத்து w r 187

அவ்விடத்தை விட்டுச் செல்லலாள்ை. அவள்கை யிடத்தேயே அச் செங்குவளை மலரும் விளங்கிற்று. 聲

திடுமெனக் கோபித்த பார்வையோடு சென்று, அக் குவளைமலரை அவள் கையினின்றும் பறித்துக் கைப்பற்றிக் கொள்ளுதற்கு, வல்லமை இல்லாதவகை நீயும் அவ்வேளை யில் ஆயிருந்தன! 蠟

அகன்ற பெரிய வானத்தே பகற்காலத்திற்கு இடமுண் டாதலின் பொருட்டாகச், சுடுகின்ற கதிர்களைப் பரப்பி விளங்கும் அச்சம்பொருந்திய ஞாயிற்றினுடைய உருவத்தை யும், விளங்குகின்ற வெண்மை வண்ணத்தையும் கொண்ட வெண்கொற்றக் குடையினையுடைய வேந்தர்களின், வான ளாவ உயர்ந்த கோட்டை மதில்களைக் கைப்பற்றிக் கொள்ளுதற்கு, நீதான் எவ்வாறு வல்லமை உடையை யாயினையோ? நின் கண்ணி வாழ்வதாக, பெருமானே!

சொற்பொருளும் விளக்கம் : கொடியேந்திப் பகைப் படை யணிகளுடாகப் புகுந்து ஊடறுத்துச் செல்லும் களிறுகட்கும் தேர்கட்கும் கடலிடையே திசைதிரிந்து செல்லும் கலங்களை உவமை கூறினர். திசை திரிந்தாலும், அவை செல்லும் திசைக்கே முடிவிற் சென்று சேர்வதுபோல, இவையும் பகைப் படியணிகளைச் சிதைத்தபின் மீண்டும் ஒன்றுகூடும் என்ப தாம். களிறு மிடைந்து' என்றது, அவை பகைப்படைக் களிறுகளைத் தாங்கிச் செறித்து அழித்து என்றது ஆம். "ஊர்ந்த தேரே, சிறுகுடிப் பரதவர் பெருங்கடல் மடுத்த கடுஞ்செலற் கொடுந்திமில் போல (அகம். 330) எனப் பிற சான்ருேரும், தேர்ச்செலவைக் கடலிடைச் செல்லும் கலங் களின் செலவுக்கு ஒப்பிடுவர். இதனுற் கடல்போற் பெரும் படை உடைய பகைவர் என்பதும் பெறப்படும். நுடக்கம் - அசைவு. நிலைய நிலைகளையுட்ைய மிடைந்து - செறிந்து. வடிமணி - வார்த்தமைந்த மணி. அருங்கலம் - நம் நாட்டில் கிடைத்தற்கரிய அணிகலம். நிவத்தல் - மிதத்தல். வங்கம். கப்பல்கள். மை - கருமை. தோல் - கிடுகு கேடகம். மெய் புதை அரணம். கவசம். எஃகு - வேலும் வாளும் பிறவும். வன்கண் ஆடவர் - வன்கண்மை உடையரான மறவர்; அவர் மெய்புதை அரணம் எண்ணுது எழுந்தது, அவர்தம் ஆற்றலிற் கொண்ட உறுதிப்பாட்டினல். தும்பை - தும்பை மாலை. எவ்வழி . எவ்வழியும், எப்புறமும், தும்பை வழி விளங்க' என்றது, பகைப்படை மறவர்கள் பட்டு வீழ்ந்தனர் என்றதாம். உயர்நிலை உலகம் எய்தினர்' என்றது, அவரும் மறப் போராற்றி மாண்டனர்