பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 - பதிற்றுப்பத்து தெளிவுரை

முன்னும் பின்னும்கின் முன்னேர் ஒம்பிய எயில்முகப் படுத்தல் யாவது? வளையினும் பிறிதுஆறு செல்பதி சினங்கெழு குருசில்! எழுஉப்புறங் தரீஇப் பொன்பிணிப் பலகைக் 15

குழுஉகிலைப் புதவின் கதவுமெய் காணின் தேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல் ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி மேம்படு வெல்கொடி நுடங்கத் 20

தாங்க லாகா ஆங்குகின் களிறே.

தெளிவுரை : பகைத்தோரது நாட்டை வென்று, அவ ருடைய அரிய கலன்களைக் கொணர்தலின் பொருட்டாகச் செல்லக் கருதிய நாட்டிடத்தே சென்று நீயும் தங்குவாய். அவ்வண்ணம் நீதான் சென்று தங்கிய காலத்தே, அப் பகைவர் நினக்கு அஞ்சியவராக நின்னைப் பணிந்து, எம்க்கும் அருள் செய்தவகை விளங்குக, பெருமானே’ என்று கூறிய படி, குன்ருத புதுவருவாயுடைய தம் நாட்டையே நினக்குத் தின்றயாகக் கொடுப்பர். நீதான் அவர்க்கு அருள் செய்தாயாய், அவர் கொடுத்த செல்வங்களைப் பெற்று, அவர் நாட்டை அவர்க்கே தந்துவிட்டு, மலைகள் விளங்கும் நாட்டகத்தே யுள்ளதும், காடு சூழ்ந்துள்ளதுமான, பழம் பெருமையுடைய நின் மூதூர்க்குச் செல்லத் தொடங்குவாய். அவ்வாறு செல்வாயாயின்,

செவ்வையான மூட்டுவாய் அமைந்த சிலம்புகளோடு, அணியாகத் தொகுக்கப்பெற்ற தழையாடையும் தூங்கிக் கொண்டிருப்பதும், எந்திரப் பொறிகளாலே க்ாக்கப் பெறுவதும், அம்புகளேடைய கோட்டை வாயில்; வீழ்ந்த வரைப் பற்றி உணவாக்கிக்கொள்ளும் முதலைகளையுன்டய ஆழமும் அகலமும் கொண்ட அகழி; வளைவு வளைவாகக் கட்டப்பெற்று வானளாவ உயர்ந்து விளங்கும் மதில்; இவற்றை உடையது இக் கோட்டை. இதுதான் ம்னம் பொருந்தாதாராக வந்துமுற்றிய பகையரசரது போர்முனை கெடுமாறு குறுகிட்டதாய், நின்ற்ை கைக்கொண்டு தரப் பெற்ற துணையரசரின் எயிலாகும். அன்றியும், நின் முன்னேர்கள் முன்னும் பின்னும் தொடர்ந்து காத்துவந்த