பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

பதிற்றுப்பத்து தெளிவுரை

192 பதிற்றுப்பத்து தெளிவுரை

என்றனர். கடல்பிறங்கு வைப்பின் மூதூர் ஆதலானும், 'கடறு அரை யாத்த மூதூர் ஆதலானும், சிறந்த காப்புடைய் பேரூர் என்பதும், அழிவற்றுத் தொடர்ந்து நெடுங்காலமாக நிலவிவரும் மூதுர் என்பதும் கூறினர். 'நல்கினை யாகுமதி எம். என்றது, அவ்வரசரை அழிக்க ‘வெகுண்டு வந்தவளுதலின், தமக்கு வாழ்வருளிக் காக்குமாறு வேண்டினர் என்றதாம்.

செம்பொறி, சிறப்பாகப் பொறிக்கப் பெற்ற சிலம்பின் மூட்டுவாய், கோட்டை வாயிலில் இவற்றித் திருடிகளின் நினைவாகத்தம் வெற்றிச் செய்திகள் பொறித்த சிலம்புகளை யும், தழையாடையும் புனைந்த பாவை ஒன்றனையும் தொங் விடுவது பண்டைய மரபு என்பர். இனி, முற்றவரும் பகைவர்க்கு அறைகூவலாக, எம்மை எதிர்ப்பார் யாருமிலர்? அனைவரும் சிலம்பும் தழையுடையும் கொள்ளும் மகளிரே' என அறிவிப்பதன் சின்னமாக இப்படிப் பாவையைத் தூங்க விடுவதும், மதிலைப் பொருதும் பகைவர் முதற்கண் அதனை அறுத்து வீழ்த்திய பின்னரே போர் தொடங்குவர் என்பதும் பண்டை மரபாகும் என்பர். எந்திரத் தகைப்பு' என்றது, பகைவரைத் தாமே தாக்கியழிக்கும் காவற்பொறிகள். அம்புடை வாயில் - புதையம்புகளையும், கோட்டைக் கதவம் திறந்து உட்புகும் பகைவர்மீது தாமே சென்று பாயும் அம்பு களையும் உடைய வாயில்; இது புறமதிலின் சிறப்புக் கூறியது. இதனையடுத்துக் கிடப்பது புறமதிலின் கோள்வல் முதலேய குண்டுகண் அகழி யாகும். கராஅங் கலித்த குண்டுகண் அகழி' எனப் புறப்பாட்டுக் (புறம் 37) கூறுவதும் காண்க. குண்டு - ஆழத்தையுடைய. கண் - அகன்ற இடத்தையுடைய. அகழி - அகழ்ந்தமைந்த, கோட்டைக்குள் கிடங்கு. வளைந்து செய் புரிசை என்றது. இடையிடையே வீரர் நின்று போரிடற்கு ஏற்ற வளைவுகளுடன் அமைக்கப் பெற்ற கோட்டையினை. முனை - போர்முகம். விலங்கி - குறுக்கிட்டு. மன்னுதல் - நிலைபெறுதல். எயின் முகப் படுத்தல் - கோட்டைக்கு நேராகச் செல்லுதல். 'யாவது - எதளுலோ? என்றவர், அடுத்து அதனை மறுத்ததற்கான காரணத்தை உரைக்கின்ருர்.

"சினங்கெழு குரிசில்' என்றது, நகைவர் பணிந்து திறை தந்த பின்னரும் தணியாத சினத்துடன் சென்று கொண் டிருந்தவன் சேரன் என்பதாம்; இது பகைவர் முன்னர்ச் செருக்கியிருந்த நிலைகளை நினைதலால் ஏற்பட்டதாம்; அவர்