பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் பத்து

195

ஆரும் பத்து - 198

வறுமைத் துயரம் முற்றத்திருமாறு, புகழமைந்த நல்ல அணி கலன்களை நினக்கெனப் பேணி வையாது, நாள்தோறும் வழங்கியபடி இருப்பாய். நீதான் அத் தன்மையினன்! ஆதலினலே, எத்துணைச் சிறிதளவு காலமேனும் துறக்க ம்ாகிய உலகினுக்குச் செல்லர்தவகை, இந்த அரச வாழ் விலேயே நிலை பெற்றிருப்போகை, இப் பெரிய உலகினிடத் தேயே நீயும் நெடுங்காலம் வாழ்வாயாக!

சொற்பொருளும் விளக்கமும் : தய குறைய. ஏணி - எல்லை. படர்ந்து - சென்று. படுகண் - ஒலிக்கும். கண்ணிடம். 'நடுவண் என்றது பாசறைகளின் நடுவிடம் என்றவாரும். சிலைத்தல் - முழங்கல். தோமரம் - தண்டாயுதம். நாமம் . அச்சம். செய்ம்மார் - செய்வதற்காக; மாரீற்று முற்று. ஒல் லார் - பகைவர். 'நாமம் செய்ம்மார் என்றது, படையொடு வரும் பகைவருக்குத் தம் மறமாண்பு புலப்படச் செய்தபடி என்றதாம். இது பிற படைகளே ஒதுக்கி, முதற்கண் யானைப் படை புகுந்ததனைக் குறித்துக் கூறியதுமாம். வியம் . ஏவல். வள்ளலாவார், முன்னம் முகத்தின் உணர்ந்து அவர் இன்மை தீர்த்தலை இயல்பாக உடையராதலின், உள்ளியது முடித்தி' என்றனர். முடித்தி - முன்னிலை ஏவல் வின.

வீங்கு இறை - பெருத்த சந்துப் பகுதி. தடைஇயபருத்த அமை - மூங்கில், ஏந்தெழில் - உயரிய அழகு. வனந்து வரல் - பூரித்து எழுதல். மின்னிழை - மின்னலிடும் அணி வகைகள். புன்கண் - வறுமைத் துயரம். வரைவில் - தனக்கெனப் பேணி வைத்தல் இல்லாது. மன்னியர் - நிலை பெறுவாயாக.

55. துஞ்சும் பக்தர் !

துறை : செந்துறைப் பாடர்ண் பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணம். தூக்கு செந்துக்கு பெயர் : துஞ்சும் பந்தர். இதற்ை_சொல்லியது : சேரன் உலகு காத்தலும், தன் குறையும் கூறி வாழ்த்தியது.

(பெயர் விளக்கம் : நன்கல வெறுக்கை துஞ்சும் என்ற சிறப்பால் இதற்குத் துஞ்சும் பந்தர்' என்பது பெயரா யிற்று.)

ஆன்ருேள் கணவ சான்ருேர் புரவல!

கின்னயந்து வந்தனென்; அடுபோர்க் கொற்றவு