பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

பதிற்றுப்பத்து தெளிவுரை


பற்றுங்காலத்தே அனைத்தும் அழிந்தொழிந்து மறையும் என்பதும் உணர்த்துவதாம்.

சிரந்தை இரட்டும் விரலன்' என்றது, உடுக்கையினின்று தோன்றும் 'ஓம்' என்னும் ஆதிநாதமான பிரணவ ஒலியைத் தோற்றுவித்து, அதனின்று அனைத்தையும் முறையே பூத் தெழுமாறு தோற்றுவிப்பவன் அவனே என்றற்காம்.

இளம் பிறை சேர்ந்த நுதலும், களங்கனி மாறேற்கும் பண்பின் மறுமிடறும் அவனது அளப்பில் பெருங்கருணையை வியந்ததாம் அளவில் ஆற்றலையும் நினைந்ததாம்.

'சூலம் பிடித்தவன்' என்று கூறியது முத்தொழிற்கும் தானே முதல்வளுகவும், முச்சக்திகட்கும் தானே முதல்வளுக வும் விளங்குபவன் அவன் என்று உணர்த்துதற்காம். இது முத்தலைச் சூலம் எனவும் கூறப்பெறும். #

'காலக் கடவுட்கு' என்றது. அவன் காலத்தைக் கடந்து நிற்பவன் எனவும், அவனே காலமாக அமைபவன் எனவும், அவனே ஆதி முழுமுதல் எனவும் உணர்த்துதற்காம்.

அனைத்துமாகிய அவன் பெருவெற்றி உலகெங்கும் உயர்ச்சிபெறுக’ என்றது. உலகமாந்தர் அனைவரும் அவன் செயலே அனைத்துமென்பதை உணர்ந்து, அவன்பாலே தம்மை யும் ஒன்றுபடுத்தி உயரவேண்டும் என விரும்பி உரைப்பதாம். அதற்கான கோட்பாட்டிலே உலகோர் சித்தத்தைத் தீவிரப்படுத்த நிக்னந்து கூறியதுமாம்.

சிவனே உமையொரு பாகம் உடையவளுகக் கொண்டு வழிபட்டு வாழ்வுபெறும் மரபு பண்டைக்காலத்துத் தமிழ் மரபே என்பதனையும் நாம் இதகுல் அறிதல் வேண்டும்.

அனைத்துமாகியவனின் மாவலன் உயர்க' என்று போற் քD லால், அனைத்தும் இனிதே நிறைவெய்த, அவ்வாறு போற்று வாரும் மாவலன் உயரப் பெற்றவராகி மாண்படைவர் என்பதாம்.