பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் பத்து

199

Վ3ցճ ա{\a . 199.

தெளிவுரை: விழவானது பெருமையோடும்_விளங்கிய அகன்ற தன் ஊரினிடத்தே, கூத்தரது முழவொலியின் முன்னர் ஆடும் தொழிலில், நம் சேரலாதன் வல்லான் அல்ல்ன். அவன் தலைக்கண்ணி வாழ்வதாக!

வெற்றியுண்ட்ாதற்குக் காரணமான முரசம் பெரிதும் முழக்கஞ் செய்யத் தன் வாளை உயர்த்தவனுகவும், விளங்கும் பூண்களை அணிந்தவனாகவும், பொன்ற்ை செய்த உழிஞைக் கொடியைச் சூடியவளுகவும், தம் அறியாமை மிகுதியாலே பகைகொண்டு படையெடுத்து வந்த பகைவேந்தர்,-தம் உடம்பை மறத்தற்குக் காரணமான வெற்றிச்செல்வம் அழிந்து கெட்ட போர்க்களத்திலே, ஆடுதலில் மட்டுமே அவன் வல்லவன் ஆவான்! *

சொற்பொருளும் விளக்கமும்: 'விழவு வீற்றிருந்த வியலுள்' என்றது சேரலாதனது கோநகரை அங்கு கூத்த ரோடு கலந்து ஆடுவான் அல்லன். கோடியர் - கூத்தர். வியனுள் - அகன்ற ஊர்: பேரூர். கோடியர் முழவின் முன்னர் ஆடல் வல்லான் அல்லன் என்பதஞல், பெருமைக்கு யாதும் குறைவில்லை என்பார், வாழ்க அவன் கண்ணி என்கின்றன்ர். வலம்படு முரசம் - வெற்றியுண்டாதற்குக் காரணமான முரசம்; இதன் முழக்கம் படைஞரை ஊக்கிப் போர்க்களத்து வெற்றியீட்டச் செலுத்தலால், வெற்றி முரசம் ஆயிற்று. துவைப்ப - பெரிதும் முழங்க. பொலங்கொடி உழிஞைய்ன் . பொற்கொடி போன்ற கொடியைக் கொண்ட உழிஞையின் பூவைச் சூடியவனும் ஆம். உழிஞை - கொற்ருன் பொலங் கொடி உழிஞை - பொற் கொற்ருன். மடம் - அறியாமை. மெய்ம்மறந்த வாழ்ச்சியாவது தம் உடம்பைக் கைவிட்டு மறந்து வீரசுவர்க்கத்தே சென்று வாழ்தல்.போர்க்களத்திலே ஆடும் கோ, கோடியர் முழவின் முன்னர் ஆடல் வல்லான் அல்லன் என்கின்றனர். வீந்துகு போர்க்களம் - பகைவர்பட்டு வீழும் போர்க்களம்:

தம் அறியாமையாலே செருக்கிப் போர்க்கெழுந்தவரான பகைமன்னரை அழித்து வெற்றியடைந்து, அக் களத்திலே நின்று, தன் வாள்வீரர்களுடன் வெற்றிக் கூத்தாடுவதற்குச் சேர்லாதன் வல்லவனேயல்லாமல், கூத்தர் முன்பாக நின்று களிக்கூத்து ஆடிக் களித்தலில் வல்லவன் அல்லன் என்பதாம்,