பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

பதிற்றுப்பத்து தெளிவுரை

909 பற்றப்பு:கென

'விரல் கவர் யாழ்' என்றது, வாசித்து வாசித்துப் பழகிய தஞலே எடுத்ததும் வாசிக்கத் தூண்டும் கை பழகிய யாழ் என்பதாம், g

தழிஞ்சி - வேந்தர் தம் படையாளர் முன்பு போர்செய் துழிக் கணையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே தடுத்துக்கொண்டு அழிந்த்வ்ர்களைத், தாம் சென்று பொருள் கொடுத்தும் வினவியும் தழுவிக்கோடல்: தழிச்சுதல் தழிஞ்சி யாயிற்று. 'அழிகுநர் புறக்கொடை அயில்வாள் ஒச்சாக், கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று (புற. வெ. 55). துணைப் புதல்வர் - துணையாகும் புதல்வர்: முதுமைக்கண் உதவியும், தந்தைக்கு இவன் தந்தை என் நோற்ருன், கொல்?" என்னும் புகழும் தேடித் தருதல்பற்றிப் புதல்வரைத் "துணை' என்றனர். நல்வளம் - நற்செல்வம்: நற்புதல்வரே நற்செல்வம் என்பது கூறினர். "இம்மை யுலகத்து இசை யொடும் விளங்கி, மறுமை உலகமும் மறுவின்றெய்துப, செறு நரும் விழையும் செயிர் தீர் காட்சிச், சிறுவர்ப் பயந்த செம் மலோர்' என, இவராற் பெறும் சிறப்பைக் கூறுவர் ஆசிரியர் செல்லூர்க் கோசிகன் கண்ணளுர் (அகம். 66). இத்தகைய புதல்வரைப் பெற்றுத்தந்த மகளிர் போற்றற்கு உரியர் என்பது தெளிவு. குடைச்சூல் -சிலம்பு; உட்டுளை உடைத் தாய்ப் பரல் பெய்யப்பெற்று விளங்கலின் இப் பெயர் பெற்றது. வளம்-தொழில் வளம். அடங்கிய கொள்கை-தம் கணவர் விருப்பையே தம் விருப்பாகக் கொண்டு, தம்மளவில் மனமொழி மெய்களால் அடங்கியொழுகும் ஒழுக்கம். ஆன்ற அறிவு - நிறைந்த அறிவு; பெண்பாலார்க்கு அறிவின் இன்றிய மையாயை இது வலியுறுத்தும். தோன்றிய நல்லிசை' என்பது, "புகழ் புரிந்த இல்வாழ்வு' என்பதனைக் குறித்தற்கு. மனமகளிரின் தன்மை இவற்ருல் விளக்கப்பட்டது. துனி - முற்றிய ஊடற்சினம்; அதனைத் தணிவித்துக் கூடல் கணவர் தம் கடமையாகும்; அதனைக் காட்டிலும் இரவலர் புன் கண்மை கண்டு அஞ்சும் அருளாளன் சேரலாதன் என, அவன் கொடைச் சிறப்பையும் கூறினர்; இதல்ை அவன் நம் துயரை யும் தவருமல் தீர்ப்பான் என்பதும் கூறினதாகக் கொள்க. எதிர் கொள்வன் - ஏற்றுக் கொள்வோன்.

துணங்கை - துணங்கைக் கூத்து. பூட்கை - மறவரின் வெற்றியே பெறுவேம் என்னும் மனவுறுதி. மிடல் - வலிமை. புடையல் - மாலை. பனிற்றும் . துளிக்கும். புலால் - புலால் நாற்றம். களம் - போர்க்களம்; அதனையடுத்த பாசறையைக் குறித்தது; கங்கையிடைச் சேரி என்கு ற்போல.