பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

பதிற்றுப்பத்து தெளிவுரை

204 பதிற்றுப்பத்து தெளிவுரை

அலங்குகதிர்த் திருமனி பெறுஉம் அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே.

தெளிவுாை : இடியை யொத்துப் பகைவரைத் தம் வெற்றி முழக்கத்தாலேயே தாக்கி அழிவடையச் செய்பவர் சேரமானின் படைமறவர்கள். அவர்கள் வெண்மையான பனந்தோட்டினலே க்ட்டிய ஒள்ளிய குவளைப்பூ மாலையின அணிபவர்; வாளது வாயாலே வடுப்பெற்ற மாட்சி பொருந் திய தழும்புகள் கொண்ட உடலினர். அவர்கள், பகைவரைக் கொல்லுதற்குரிய தத்தம் படைக்கருவிகளை ஏந்தியபடியே வருவர், வந்து

"இன்று இனிதான பலவற்றையும் உண்டேமாய் இன் புற்றேம் ஆயினும், இனி நாளைக்கு, மண்ணுலே கட்டப் பற்று உள்ளவான பகைவேந்தரது கோட்டைமதில்களைக் சைப்பற்றிய பின்னரன்றி யாம் உணவு உண்ணுவேமல்லேம்' என வஞ்சினம் உரைத்து எழுவர். தாம் குடியுள்ள கண்ணிக்கு ஒப்பப் போர்வினை செய்தலைக் கருதிய அத்தகைய மறவர்களை உடைய பெருமகன், சேரன்

தாம் சொல்லிய சொற்கள் பொய்யாதலை என்றும் அறியாமையாலே. விளக்கம் அமைந்த செவ்விய நாவினை யும், பகைவரது மதில்களைத் தாக்கியழிக்கும் வலிய வில்லும் அம்பும் ஏந்தி விளங்கும் பெரிய கையினையும், உயர்ந்த அழகிய மார்பினையும் உடையவராகிய அம்மறமாண்பினர்க்கு, மெய்ம் மறை யென்னும் கவசத்தைப் போன்று காவலாக விளங் குபவன் வானவரம்பணுகிய சேரன்' என்று சொல்வார்கள்.

கானத்திடத்தே ஒலிசெய்தபடியிருக்கும் சிள்வீடு என்னும் வண்டுகள்ைத் தமது பொரிந்த அடிப்பகுதியிடத்தே கொண்டன சிறுசிறு இலைகளையுடைய வேலமரங்கள். அவை மி தியாகத் தோன்றுவது புன்செய்ப் பகுதி நிலம். அதனிடத்தே உழுது வித்திப் பயிர்செய்பவர் வலியமைந்த சையினையுடைய உழவர்கள். அவர்கள் சிறப்புடைய பல பசடுகளை, அவற்றின் கழுத்து மணிகள் ஒலிக்கப் பூட்டி உழுவர். அவர்களின் கலப்பைகள் சென்ற கொழுவழியின் பக கத்தே, அசைகின்ற ஒளிக்கதிர்களையுடைய சிறந்த மணிக் கற்களை அவர்கள் பெறுவார்கள். இத்தகைய அகன்ற இ.மமைந்த ஊர்களையுடைய நாட்டிற்கு உரியவன் சேரமான். விறலியர்களே! அவன் உவக்குமாறு நீவிர் ஆடு