பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் பத்து

211

<ಆಹಿ 4,ಶಿವ 亭 sii

சொற்பொருள் விளக்கம் : புறம் மிஞரிறு மூசவும்" என்றது, மனத்தின் இனிமையாற் கவரப்பெற்ற வண்டினம், புறத்தே மொய்த்த டி இருக்கவும் என்றதாம். தீஞ்சுவை திரியாது’ என்றது, அழியக் கனிந்து உண்ணத் தகாதபடி மாறுபடாததாய் என்றதாம். அரம் . அரிவாள். போழ் கல்லா . பிளக்கமாட்டாத உறுதியான தோலையுடைய. தீங்கனி - இனிய பலாக்கனி. மரம்படுகனி' என்றது, புல்லினத்துப் பனம்பழம் போன்ற புறக்காழனவாய கனிகளை விலக்குதற்கு. சேறு - பழச்சாறு. முண்டை - முட்டை. (தொல், எச்ச. 7.). பலாப்பழத்தின் வடிவைக் குறிப்பதற்கு முண்டை விளை பழம் என்றனர். ஒய்தகை - ஒய்ந்துபோன தன்மை: ஒய்ந்துப்ோனது வழிநடை வருத்தத்தால். விளேயுள் . விளைவயல்கள்: மரு.அ விள்ைபுள்' என்ற்துஎன்றும் மாருதே பிளேயும் வளவயல்கள் என்பதற்காம். அரு.அ யாணர் - கெடாத புதுவருவாய். தொட்ை தொடுத்தல், மடி. சோம் பல். களைந்த -போக்கிய. பிசிர்-நுண்துளிகள். புணரி - அல்ல. மங்குல் வெண்மேகம். மயங்கிவரல் - கலந்துவரல். ஊதை - வாடைக் காற்று.

வழிச்செல்வாரின் களைப்பைப் பலாப்பழம் போக்கும் 鷺 அவன் நாட்டுமரமும் அருளுடையது என்பதற்காம். இனி, வழியிடையே இவ்வாறு நிழல்தருவதற்கும் பழந்தருவ தற்கும் பலவகை மரங்களை வைப்பது மரபு எனலும் கொள் ளப்படும். சாயினம் . ஆயமகளிர்; இவர் தம் ஆடலும் பாடலும் காட்டி மன்னனை மகிழ்விப்பவர்.

மன்னன் சாயினத்துள்ளான்; அவன் மறவரும் அவனும் போர் விரும்பினர்; அடுத்து எங்காயினும் சென்றுவிடலும் கூடும்; ஆகவே, இப்போதே சென்று அவனைக் கண்டு வருவேம்: அவன் பரிசில்களை வரையாது வழங்குவான் என்பதாம்.

துவ்வா. நறவு - நறவு என்னும் பட்டினம். சாயினம் - மென்மை வாய்ந்த பெண்ணினம். மரு.அ விளையுள் தொல் லது விளைந்தென வளம் கரவா விளையுள். -

'மரு.அ விளையுள் வயலிடத்து விளையும் விளைச்சலென வும், அரு.அ யாணர் கடலவும் மலையவுமாகிய பொருள்கள் எனவும் கொள்ளலும் பொருந்தும். 邨

"அரம்போழ்கல்லா மரம்படு தீங்களி' என்றது, புறக் காழனவாகிய பன முதலிய்வற்றின் தீங்கனியை நீக்குதற்கு.