பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

பதிற்றுப்பத்து தெளிவுரை

and . பதிற்றுப்பத்து தெளிவுரை

போழ்க் கண்ணி, 8. ஏம வாழ்க்கை, 9. மண்கெழு ஞாலம், 10. பறைக் குரல் அருவி என்பன.

தெளிவுரை: சோம்பலற்ற மனவூக்கத்தோடு போர் மேற்சென்று, விளைந்த போர்களிலே பகைவரை வென்று சிறைப்பிடித்துத் தன் வஞ்சிநாட்டிற்குக் கொணர்ந்தவன்; நுட்பமான பரந்த கேள்வி ஞானத்தைக் கொண்டவன்: சேர மான் அந்துவன் சேரல். அவனுக்கு ஒரு தந்தை பெற்ற மகளான பொறையன்தேவி என்பாள் பெற்றுத்தந்த மகன் செல்வக் கடுங்கோ வாழியாதன்.

அவன், தன் நாட்டினிடத்தே பல புதிய நகரங்களை உண்டாக்கியவன்; தன்ைேடும் பொருந்தாதாரான பகை வரைக் களத்தினின்றும் தோற்று ஒடச் செய்தவன்; கேட்ட மாத்திரத்தானேயே பகைமன்னர்க்கு அச்சத்தை வருவிக்கும் பெரும்படையினைக் கொண்டோஞய்ப் பல போர்களையும் செய்து வெற்றி பெற்றவன்.

புகழ்தல் பொருந்திய பெரிய வேள்விகளை இயற்றுவித்த வன்; அவற்றைச் செய்வித்த பொழுதிலேயே அறத்துறைப் பட்ட பலவான தான தருமங்களையும் செய்தவன்; மாய அண்ணன் என்பானை மனம் பொருந்தத் தன் குருவாகப் பெற்று, அவனுக்கு உயர்ந்ததிறமான நெல்விளைதலேயுடைய ஒகந்துரை இறையிலியாகத் தந்தவன்; அந்தத் தனது புரோகிதனைக் காட்டிலும் தான் அறவொழுக்கங்களிலும், சாத்திர ஞானங்களிலும் மேம்பட்டவனகி, அவனையே மயங்கச் செய்தவன்.

ஞானவளம் செறிந்த உள்ளத்தை உடையவருக, எத் தகையதொரு மாசும் அற்றவகை விளங்கியவன்; அத்தகை, யோளுகிய சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பத்துப் பாட்டுக்களாலே பாடிஞர்.

சொற்பொருளும் விளக்கமும் : மடியா உள்ளம் - சோம் பலற்ற மனவூக்கம். மாற்ருேர் . பகைவர்; மாறுபட்டவர் மாற்ருர், மாற்ருேர் என்க. நெடுநுண் கேள்வி - நெடிய நுண்ணிய கேள்வி; நுட்பமான கேட்டற்குரிய பொருள்களைத் தொடர்ந்து கேட்டறிந்த ஞானநிறைவு. அந்துவன் - சேர மான் அந்துவஞ்சேரல் என்பான். ஒருதந்தை - "ஒரு தந்தை என்னும் பெயருடையான்: ஒரு தந்தை எனப் புகழ்பெற்ரு றும் ஆம். பொறையன் பெருந்தேவி சேரமான் அந்துவனின் கோப்பெருந்தேவி, அவன் இரும்பொறை மரபினன்