பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

பதிற்றுப்பத்து தெளிவுரை

18 பதிற்றுப்பத்து தெளிவுரை

பாடிப் பெற்ற பரிசில் : உம்பற் காட்டு ஐந்நூறார் பிரம தாயம் கொடுத்து,_முப்பத்தெட்டு யாண்டு தென்னுட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான் அக் கோ.

இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டு யாண்டு வீற்றிருந்தான்.

தெளிவுரை : நிலையான பெரும்புகழையும், அறநெறி களுக்குக் குற்றமில்லாதே செம்மையோடு செல்லுகின்ற அரசாணேயினையும் உடையவன், இனிதாக இசைக்கின்ற வெற்றிமுர்சத்தையும் கொண்ட வன் உதியஞ் சேரலாதன். அவனுக்கு, வெளியத்து வேளிர்களின் குடியிலே பிறந்து, அவனை மணந்து, கோப்பெருந்தேவியாகவும் விளங்கியவள் வேண்மாள் நல்லினி தேவியாவாள். அவள், அவனுக்குப் பெற்றுத்தந்த மகன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவன், என்றும் இடையீடுபடாதே வருதலையுடைய அருவி களேக் கொண்டதான இமையப் பெருமலையினிடத்தே, தன் வில்லாகிய இலச்சினையைச் சென்று பொறித்தவன். முழங்கும் கடல்களையே வேலியாகவுடைய இத் தமிழகத்தின் புக்ழ்ச்செவ்வியானது உலகமெங்கணும் விளக்கம் அடையு ம்ாறு, தன்னுடைய செங்கோன்ன்மயான அரசாட்சியை, இந் நாட்டிலே எப்புறத்தும் நிலைபெறச் செய்தவன். தன் சேரர் குடிக்கே உரித்தான தகைமைமிகுந்த போர் வினைச் சிறப்போடுஞ் சென்று, பெரும்புகழுடைய அரச மரபினரான ஆரியமன்னரைக் களத்திலே வெற்றிகொண்டு, அவரைத் தனக்குப் பணிந்து வாழச்செய்தவன். நயப்பாடு என்பதே இல்லாதவான வன்சொற்களையே கூறித் தன்னை எதிர்த்தோரான யவனத்தவரை வென்று, அவரைச் சிறைப் பிடித்தவன். அவர்தம் தலையிலே நெய்யைப் பெய்தும், அவர் கைகளைப் பின்புறமாக வைத்துக் கட்டியும்,தன் நாட்டிற்குக் கொணர்ந்தவன். அவர்க்குரியவும், மதிப்பிடற் கரிய விலையினை உடையவுமான நல்லபல அணிகலன்களை வயிரக் கற்களோடும் கைப்பற்றிக் கொணர்ந்தவன். பெரி தான வெற்றிப்புகழுடைய மூதுாரான தன் வஞ்சிநகரிடத்தே, தன் படை மறவர்க்கும் அலுவலர்க்கும் குடிகட்கும் அவற்றைத் தந்தவன். அவர் அன்றியும், தன்னை வந்து இரந்து நின்றவரான வேற்றுநர்ட்டார் பலருக்கும் இவற்றைத் தந்தும் உதவியவன். இவன், தன்ளுேடும் பொருந்தாது, தன்னைப் பகைத்த அரசர்ை எல்லாம் கொன்று அழித்த, பகைவர்க்கு நினைப்பினும் அச்சத்தைத் தருதல் யுடைய, வலிமையான தாளினைக் கொண்டவன். இத்