பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாம் பத்து

217

ஏழாம் அத்து 817

பாரி மறைந்தாளுதலின் நீதான் என்ன்ைக் காப்பாயாக' என்று இரத்தற்கு நின்பால் வந்தேனில்லை. நின் புகழைக் குறைத்தோ மிகுதிப்படுத்தியோ யான் கூறவும் மாட்டேன். "தான் கொடுத்ததனல், தன்பாலுள்ள பொருள் குறைதலைக் கரு வாழியாதன் ஒருபோதுமே இரங்கமாட்டான்: கொடுக்குந்தோறும் கொடுக்குந்தோறும் தன் புகழ் மிகுதி யாதலை நினைந்தும் தான் மகிழமாட்டான்; ஈயும் போதெல் லாம் மிகவும் வள்ளன்மையாளஞகவே விளங்குகின்ருன்' எனப் பலரும் கூறும் நினது நல்ல புகழானது, என்னையும் நின்பால் இழுத்ததஞலேயே நின்னைக் காண யானும் வந்தேன்!

சொற்பொருளும் விளக்கமும் : பசும்புண் அரியல் - புதுப் புண்போல அன்றே வெடித்த பழத்தின் வெடிப்பு வாயி ன்றும் ஒழுகும் தேன். வாடை - வாடைக் காற்று; வட காற்று வாடையாயிற்று. விறல் - வெற்றிப் பெருமிதம். "நாடு' என்றது பறம்பு நாட்டினை. ஒவம் - ஒவியம். வினை . தொழில்வினை. பாவை - கொல்லிப்பாவை: மனையின் சிறப்பை, ஒவத்தன்ன வினைபுனை நல்லில் எனவும், அம் மனைக்கு உரியவளான பாரியது பெருந்தேவியின் சிறப்பை, 'பாவையன்ன நல்லோள் எனவும் வியந்து போற்றிக் கூறினர். இதற்ை பாரிவேள் தன் காதன் மனைவியுடன் கூடி யிருந்து ஆற்றிய செறிவான இல்லற வாழ்வின் செழுமையினை யும் கண்டு மகிழ்ந்தவர் கபிலரென்று கூறலாம். உன்னம் - உன்னமரம்: போருக்குச் செல்வார். இதனிடத்து நிமித்தங் காண்பர்; வெற்றியெனின் அது தழைத்தும், தோல்வி யெய்தின் அது கரிந்தும் காட்டுமென்பது மரபு. அது கரிந்து காட்டியபோதும், அஞ்சாய்ை மேற்சென்று, பகைவரையும் வெற்றிகொண்டு, அதன் நிமித்தக் கூற்றையும் பொய்யாக் கியவன் பாரிவேள் என்பார், ! உன்னத்துப் பகைவன்' என்ற னர். உன்னம் - ஒருவகைக் காட்டு மரம்; மிகவும் வலிமை யுடையது. மார்பிற் சாந்து புலர்வதன்றி அவன் நெஞ்சத்து ஈகையான அருள் நோக்கமானது என்றும் புலராதென்பார், ‘புலர்ந்த சாந்திற் புலரா ஈகை' என்றனர். மலர்ந்த மார்பு - அகன்ற அழகிய மார்பு. மாவண் பாரி - பெருவண்மையாள கிைய பாரி. முழவு மண் புலரல் மீளவும் மண்பூசுவார் இல் ல்ாமையால். இன்தல் - வருந்திப் புலம்பல். வ்ரராச் சேட் புலம். மீட்டும் வாராத தொலைவிலுள்ள நாடு மேலுலகம்: அவன் இறந்தான் என்பது குறிப்பு.