பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

020 பதிற்றப்பத்) தெளிவுரை

அணங்குடைத் தடக்கையர் தோட்டி செப்பி பணிந்துதிறை தருபகின் பகைவ ராயின் புல்லிடை வியன்புலம் பல்லா பரப்பி வளனுடைச் செறுவின் விளைந்தவ்ை உதிர்ந்த 15 களனறு குப்பை காஞ்சிச் சேர்த்தி - அரியல் ஆர்கை வன்கை வினைகர் அருவி;ஆம்பல் மலைந்த சென்னியர் ஆடுசிறை வரிவண்டு ஒப்பும் பாடல் சான்றஅவர் அகன்தலை நாடே. தெளிவுரை : நெற்றிப் பட்டமும் பொன்னரி மாலையு மாகிய அணிகளைப் பூண்டவாகப் பலவாகிய களிற்றின் தொகுதிகள் போருக்கு எழும். மழைமேகம் என்னும்படியாக மயக்கத்தைத் தரத் தக்கவாறு, மிகப்பெரும் பலவாகிய கிடுகுகளை ஏந்தியபடியே நின் படையணிகளும் அத்துடன் எழும். பகைவரின் வாட்படைஞரையும் வேற்படைஞரை யும் முன்னளிலே பொருதழித்த, கொய்யப்பட்ட பிட்ரி மயிரையுடைய குதிரைப்படையும் அத்துடனே எழும். இவற்ருேடுஞ் சென்று, பகைவரின், வலியுடையதும், பிறரால் எளிதிற் கவர்தற்கு அரியதுமாகிய கோட்டைமதில்களின் நாற்புறமும் நெருங்கச்சென்று, அவற்றை வளத்துக் கொள் வாய். நின் நாற்படை யணிகளும் அம் மதிற்புறங்களிலே தண்டுகொண்டவாய்த் தங்கியிருக்கும். பகைவர் ஊர்களை நின் படைமறவர் கொளுத்துதலாலே, பசிய பிசிரையுடை ஒள்ளிய அழல்ானது, ஞாயிறு பலவாகப் பெருகியதுபோன்ற மாயத் தோற்றத்தைக் கொண்டதாய்ச் சுடரிட்டு, நாற் புறமும் மேலெழுந்து வானத்தேயும் விளங்கும். பொறுக்க வியலாத மயக்கத்தோடு முழக்கத்தைச் செய்தபடியே திரி கின்ற கூற்றத்தினது இயல்பினைக்கொண்ட, மிக்க திறலோடும் போர்த்துறை பலவற்றினும் பெருஞ்சிறப்புப் பெற்றுத் திகழு கின்ற வெற்றி வேந்தனே! *

தன்னுள்ளே விளங்கும் மிக்க நீரானது கரையைப் பொருறியபடியே விளங்கும் அகழியினையும், மலையைப் போலுயர்ந்த மதிலையும், கொண்டு, வந்து எதிர்த்தாரை அஞ்ச்ச்செய்யும் வலிமையாற் சிறந்த, பெரிய கையினராகிய நின் பகைவர், நினக்குப் பணிந்தாராக, நின்பால் வணக்க ழான மொழிகளைச் சொல்லியபடியே, நினக்குத் திறைப் பொருளையும் செலுத்துவாராயின்,