பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாம் பத்து

221

ஏழாம் பத்து 3.31

புல்வளமுடைய பரந்த புலத்தின்கண்ணே, பலவான ஆநிரைகளைப் பரவலாகச் சென்று மேயுமாறு போகவிட்டு விட்டு, வளமுடைய வயலிடத்தே விளைந்த கதிர்களினின்றும் உதிர்ந்த, களத்திற் சேர்த்துத் துாற்றப்படுவதல்லாத நெல் மணிகளின் குவியலைக் காஞ்சிமரத்தின் அடியிடத்தே சேர்த்துவைத்து, அதனைக் கள்ளுக்கு விலையாக வழங்கிக் கள்ளுண்ணலைச் செய்யும் வலிய முயற்சியினை யுடையவரான உழவர், அரிய பூவாகிய ஆம்பலைச் சூடிய சென்னியினராகத் தம்பால் மொய்க்கும் அசைகின்ற சிறகினையும் வரிகளையு முடைய வண்டினங்களை ஒட்டியபடியே யிருக்கும், அப் பகை வரின் பரந்த இடத்தையுடைய வளநாடுகள், இனி நின் காவ லுக்கு உட்படுதலின், புலவர் பாடும் புகழ் பெற்றனவாகும்.

சொற்பொருளும் விளக்கமும் : இழை - நெற்றிப்பட்ட மும் பொன்னரிமாலையும் போல்வனவாகிய அணிகள். எழு தரும் - போரிடலைக் குறித்து எழுந்து செல்லும். தொழுதி . தொகுதி, அணியணியாகச் செல்லும் படையமைப்பு. மழை - - மழை மேகம். தோல் - கிடுகு, அதனையுடைய தானை மற்வ ரைக் குறித்தது. எஃகு படை - வேலும் வாளும் ஆகிய படைக்கலன்களைத் தாங்கிய பகைவரின் படைமறவரைக் குறித்தது, இவரைச் சிதைத்து விரைய மேற்செல்லும் பேராண்மை மிக்க புரவிப்படை என்பார், எஃகு படை யறுத்த கொய்சுவற் புரவி' என்றனர். இப் பகை மறவர் பகைவரின் கோட்டைப் புறக்காவலர் எனவும், இவரை முதற்கண் அழித்து மேற்சென்று கோட்டை மதிற்புறத்தை முதற்கண் சென்றடைவது விரைந்த செலவையுடைய புரவிப்படை எனவும் கொள்க. மைந்து - வலிமை; பகைவர் எயிலின் வலிமை தோன்ற, மைந்து உடைய ஆர் எயில் எனவுரைத்து, அதனை அழித்து வென்ற வாழியாதனின் வாளாண்மையைப் போற்றி உரைக்கின்றனர். பசும்பிசிர் ஒள்ளழல் - பசிய பிசிரையுடைய ஒள்ளிய நெருப்பு: இது கோட்டைப் புறத்திருந்த பகைவரிடங்களை எல்லாம் எரியிட்டுக் கொளுத்தியதேைல எழுந்தது. ஞாயிறு பல்கிய மாயம் - சுட்டெரிக்கும் வெம்மையுடைய ஞாயிறு பலவாக எழுந்ததுபோன்ற அழலின் வெம்மை மிகுதியாகிய மயக்கம். மடங்கல் - கூற்றம்; ஊழிப்பெருந்தீயாகிய வடவைத்தியென வும் உரைப்பர். பாடு, இமிழ்பு இழிதரும் . முழக்கத்தைச் செய்தபடியே திரியும்; கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிலே பட்டுப் படீர்படிரென வெடிக்கும் பல பொருள்களோடு நாற்புறமும் பரவும் தீயினை, முழக்கத்தோ ெஅனைத்தையும்