பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

பதிற்றுப்பத்து தெளிவுரை

234 பதிற்றுப்பத்து தெளிவுரை

செல்வக் கோவே சேரலர் மருக! கால்திரை எடுத்த முழங்குகுரல் வேலி நனந்தலை உலகம் செய்தான்று உண்டெனின் அடையடுப்பு அறியா அருவி ஆம்பல் 20 ஆயிர வெள்ள ஊழி

வாழி யாத, வாழிய பலவே

தெளிவுரை : அறுவகைப்பட்ட ஒழுக்கங்களையும் பேணி வாழ்தலை உடையவரான பார்ப்பார்க்கு அல்லாது, பிறருக்குப் பணிதலை நீதான் என்றுமே அறிந்தவனல்லை! பணிதலென்ப தற்ற உள்ளவெழுச்சியோடு, நின்னுடன் அழகுறப் பொருந்தி யிருக்கும் நின் உயிரனைய நண்பர்க்கல்லாது பிறருக்குக் கண்ணுேட்டஞ் செய்து அஞ்சவும் மாட்டாய் வளைந்த இந்திர தனுசைப் போன்ற மாலையானது கிடந்து வருத்தியபடியே யிருக்கின்ற தன்மை கொண்டது, நினது நறுஞ்சாந்து பூசப் பெற்றதஞ்லே மண்ங் கமழ்ந்துகொண்டிருக்கும் பர்ந்த மார்பகம். அதனை, நின் உரிமை மகளிர்க்கல்லாது பிறருக்கு விரித்துக் காட்டுவதனையும் நீதான் அறிந்திலை! நிலவகைகள் தத்தம் இயல்புகளிலே நின்றும் திரிந்து கெடுகின்ற வறட்சிக் காவ்த்தே யாலுைம், சொல்லிய சொல்லினைப் பொய்யாக்கு தலையும் நீதான் அறியமாட்டாய்!

மிகச் சிறிய இலைகளைக் கொண்டதான உழிஞைப் பூவின் மாலையைச் சூடியபடியே, பகைப்புலத்தே யிருந்து கொள்ளத் தக்க செல்வம் மிக வுண்டாகுமாறு, தண் தமிழ் மறவர் களாகிய படையினைச் செலுத்திச் சென்று, குன்றுகள் நிலை தளர்விக்கும். இடியேற்றைப்போலச் சீற்றம் கொண்டு, ஒரு வளைப்பிலேயே பகை மன்னர் இருவரைத் தோற்ருேடச் செய்த, ஒள்ளிய வாட்படை மறவரால் செய்யப்படுகின்ற வாட்போரிலே மேம்பட்ட தானையினையும், வெற்றிப் போரை யும் உடையோனே! n

முன்னர்ப் பல போர்களையும் செய்து வெற்றி பெற்றவ ராக இருந்தும், நின்னேடு செய்த போரிலே அப் பகை மறவர்கள் தம் வலியழிந்து தோற்றனர். தம் பகைமை எண்ணத்தினின்றும் மாறியவராக, நீ கருதியதையை இனிச் செய்வோம் பெருமான்ே! எனத் தாழ்மொழி கூறியவாறு 'நின்னைப் போற்றிப் பணிந்தனர். நீயும், நின் முன்னேரைப் போன்றே வன்மையும் கண்ணுேட்டமும் கொண்டனையாய், மேலும் பல போர்களைச் செய்து பகைவரை வென்றன.