பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாம் பத்து

225

ஏழாம் பத்து 225

அதனல், சேரவரசர்களின் குடிப் பிறந்தோனே! செல்வக் கடுங்கோ வாழிய்ாதனே! காற்ருலே எடுக்கப்பெறும் அலை களின் முழக்கமாகிய குரலேயுடைய கடலினையே வேலியாகக் கொண்ட, பரந்த இடத்தையுடையது இவ்வுலகம். இவ் வுலகத்தவர் செய்த நற்செயல்கள் என்பது உண்டாயிருக்கு மால்ை, இல்கள் அடுக்கியிருத்தலை அறியாத அரும் பூவின் பேராகிய "ஆம்பல் என்னும் பேரைக் கொண்ட பேரெண்ணின் மேலும், ஆயிரவெள்ளம் என்னும் ஊழியள ஆம், வாழியாதனே, நீதான் பல புகழோடும் கூடியவளுக நெடிதிருந்து வாழ்வாயாக!

சொற்பொருளும் விளக்கமும் : பார்ப்பார் - 'அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்’ என்ருற்போல, அறுவகை ஒழுக் கத்தானும் நிரம்பிய சான்ருேர். இவரைப் போற்றிப் பணிதல் பண்டையோர் போற்றிய மரபு. இறைஞ்சுக பெரும நின் சென்னி, சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே என வரும் புறப்பாட்டு அடிகளும் இம் மரபினைக் காட்டும் (புறம். 6.). பணியா உள்ளம்' என்றது, செருக்கிய பகைவர்க்குப் பணிந்துபோக நினையாத மன்வூக்கத்தை; தட்பு நிலையில் தாழ்வு படாத உள்ளமும் ஆம். கெழிஇ . . பொருந்தி. கண் - கண்ளுேட்டம் - தாட்சணியம்: நண்பர்க் குத் தாட்சணியத்திற்காக அஞ்சுதலன்றிப் பகைவர்க்கு ஒருபோதும் அஞ்சாய் என்பார், 'நட்டோர்க்கல்லது கண் அஞ்சலே' என்றனர். நட்டோர் தம் உரிமையாற் சிலபோது கடிந்து.கூறினும், அவர்க்குப் பணிந்து போதலையே இவ்வாறு கூறினர். தார், வளைந்த இந்திர தனுசைப்போல் மார் பிடத்தே விளங்குதலின், வண்ங்கு சிலை என்றனர். அகலம். மார்பு. மகளிர் - உரிமை மகளிர் மலர்ப்பு' என்றது, தழுவிக் கொள்ளத் தருதலை; இது பிறர் யாரும் பொருத்ற்கு முன்வராததனால், நீதான் போகத்துக்கு இடமாக.அல்ல்ாதே பொருதற்கென்று மலர்வித்தலை அறியாய் என்றதாம். நிலம் திறம் பெயர்தல் - நிலவகைகள் தத்தம் தன்மை கெட்டிட அழிதல், அத்தகைய ஒருந்தாயக் காலத்து அனைத்துயிரும் தம் நிலைகெடுதல் கூடுமெனினும், வாழியாதன் சொன்ன சொற்களைப் பொய்ப்பதிலன் என்பதாம். இது அவன்

வாய்மையையும், அவன் நாட்டு வளமையையும் கூறியது மாம்.

"உழிஞைத் தெரியல் குடி என்றது, நிகழ்ந்தது உழிஞைப் போர் என்பதற்காம். கொண்டி. கொளப்படும் பொருள்.

tus-10