பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாம் பத்து

237

கழாம் பத்து 场 赠岛仍

அமைந்ததும், வெட்டுண்ட வீரர்களின் நிணக்குவியல் கிடப் பதுமான போர்க்களப்பரப்பிலே, சிறகுகளையுடைய எகுவை களின் கூட்டங்கள் குருதியை நிறைய உண்டுகொண் டிருந்தன. தலைகள் வெட்டுப்பட்டுப்ப்ோய் எஞ்சிக்கிடந்த ஆண்மை மிக்கவையான மறவர்களின் குறையுடம்புகளோடு, அழகற்ற வடிவத்தையுடைய பேய்மகள் காண்போர்க்

வருத்தத்தைச் செய்தபடி இருந்தாள். இவ்வாறு, பகைவரின் நாடுகள் அனைத்தும் ஒருசேர நடுக்கங் கொள்ளுமாறு, பல

போர்களிலும் ஈடுபட்டுப் புகையரசரைக் கொன்றவள் வாழியாதன். -

மணம் வீசுகின்ற கொன்றை மலர்களோடு சேர்த்துத் தொடுத்த வெள்ளிய பனங்குருத்தும் கொண்ட் 蠶 கண்ணியை உடையவர்கள்: வாளின் வாய் வெட்டியதல்ை அமைந்த வடுக்களாகிய மாட்சிமைப்பட்ட கோடுகள் பாருந்திய உடலினைக் கொண்டவர்கள்; முறுக்குண்ட கொம்புகளையும் கரிய கண்களையும் கொண்ட ஆட்டுக்கிடாய் களோடு, வளைந்த தலைகளையுடைய பிற விலங்குகளின் தாழ் வான இழிந்த இறைச்சிகளையும் விற்பவர்கள்; ஊனை வைத்து வெட்டரிவாளால் வெட்டிச் சிதைக்கப் பயன்படுத்தும் மணக்கட்டையைப் போன்று விளங்கும் பகைப்படையால் புண்பட்டுச் சிதைந்த மார்பினை உடையவர்கள்:'அம் மார்பு களிற் பூசப்படும் சந்தனக்குழம்பையும் மறைத்தபடி அவ் வடுக்கள் தோன்ற விளங்குபவர்கள்: வாழியாதனுடைய படை மறவர்கள். அவர்களுடைய தலைவன் அவன்!

மலர்ந்துள்ள காந்தட்பூக்களைத் தெய்வத்திற் உரியவை எனக் கருதி அகன்று போகாதே, அவற்றையும் ஊதித் தேனுண்ட பின்னர், விரைந்து அவ்விடத்திலிருந்து பறக்கும் வண்டுகள், ஆப் பூக்களைத் தெய்வமானது விரும்புதலை யுடைத்து ஆயினமையாலே, தம்முடைய பற்க்கும் பண்பினை இழந்துபோய்விடுவன வாகும். அத்தகைய பெருமை நிறைந்த நெடிய பக்கமலைகளை யுடையதாக, மிகவுயர்ந்து விளங்கும் நேரிமலைக்குரிய தலைவனும், செல்வத்தாற் சிறந்த கோமானுமாகியவன் செல்வக்கடுங்கோ வாழியாதன். அவனைப்பாடினையாகச் சென்ருயால்ை, நீதான் தெண்கடல் முத்தமொடு பிற நன்கலமும் பெறுகுவை.

சொற்பொருளும் விளக்கமும் : கொடுமணம் - ஒர் ஊர்: அணிகலன் செய்யும் தொழிலிற் பேர்பெற்றது. நெடுமொழி. பெரும்புகழ். ஒக்கல் . சுற்றத்தார். பந்தர் - ஓர் ஊர் முத்துக்