பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

பதிற்றுப்பத்து தெளிவுரை

B 53 பதிற்றுப்பத்து தெளிவுரை

தொடர்ந்து நல்ல விளைச்சலைத் தருகின்ற தன்மை. கண் - இடம். செறு - வயல். அருவி - அரிய பூக்கள்: வீ' என்பது "வி" என்ருயிற்று. ஆம்பல் - செவ்வல்லி. நெய்தல் . நீல மலரினைக் கொண்ட நீர்த்தாவர வகை. செறுவினை மகளிர் . வயலில் வேலைசெய்யும் மகளிர். உழத்தியர் - உழவர் மகளிர். மலிந்த . அடுத்துள்ள. வெக்கை போரடிக்கும் களமும்: நிர்வளமிக்க வயல்களையடுத்துக் காய்ந்துள்ள மேட்டுப்பகுதி யாக இருத்தலின் வெக்கை என்றனர். பரூஉப் பகடு - பெரும் பகடு; பெரிய எருமைக்கடாக்கள். மென் செந்நெல் - மென்மை வாய்ந்த செந்நெல்; மென்மை சமைத்தபின் தோன்றுவது; அதன் நெல்லுக்கு ஏற்றிக் கூறினர். அம் பணம் . மரக்கால் என்னும் அளவு கருவி. உறை - அம்பாரம். தேறு-தெறுதல்; கொட்டுதல்: விகுதி கெட்டு முதல்நீண்டது. மொசிதல் . மொய்த்தல். துஞ்சும் . தூங்கும். கிளேத்த . கலத்த, அலந்தனர் -சிதறியோடிப் புண்பட்டு வருந்தினர். இளந்துணை மகார் - அறிவற்ற சிறுவயதுப் பிள்ளைகள். அவர் குளவிக்கூட்டைப் பின்விளைவு கருதாராய் வேடிக்கை மாகக் கலைக்க, அவற்ருல் தாக்கப்பட்டுத் துன்புறுவார். அவ் வாறே நின் திறலை அறியாதே வந்து நின் கோட்டையைத் தாக்கியவரும், நின் படை மறவரால் தாக்கப்பட்டுப் புண். பட்டுச் சிதறியோடுவாராக வருந்தினர் என்பதாம்.

எரி, கவர்தல் - எரியானது ஊரைச் சூழ்தல். உருத்து சினங்கொண்டு. உரைஇ பரந்து மாதிரம் - திசைகள். தோன்றலியாது - வெளிப்ப்ட்டுத் தோன்றிப் பேர்ரிடாதே. பழி - பழிச்செயல்; போர்மரபுக்கு மாறுபட்டதான செயல்; அதுதான் எயிலுள்ளிருந்து சுருங்கைவழி அனைவரும் தப்பி ம்ோடல். ஊக்குநர் - முயல்வோர். குண்டுகண்'. ஆழம்ான இடம். குறுந்தாள் - குறுகலான படிகள். ஞாயில் - மதிலின் உறுப்புக்களுள் ஒன்று: மறைந்திருந்து கோட்டையை முற்றிய வர்மேல் அம்புகளை எய்தற்கேற்ற வசதிகளமைந்த உயரமான இடம். ஆர் எயில் - எளிதாக அழித்தற்கருமையுடைய கோட்டை மதில் ஏறு . எருது. ஆயம் - பசுமந்தை. புகல் சிறந்து விருப்பம் மிக்கு. கைவிடுப்ப - தான்மாகத் தர. வைகற் பொழுது - விடிகாலப் போழுது. தினையூ - நினைந்து: செய்யூ என்னும் வாய்பாட்டு வினேயெச்சம். ஆன் பயன் . பால் தயிர் மோர் நெய் முதலியன. ஆன் பயத்தால் வாழுநர் யர் என்க: அவர்கள் தலைவன் கழுவுள்' என்பான். வருக்குரிய் ரேர் ஆமுர்’ என்பர். -