பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாம் பத்து

255

எட்டாம்ப த்து ýös

பொருட்டுச் சிவந்த சுவால்களோடும் தோன்றும். நீயோ எல்லார்க்கும் மகிழ்ச்சியைச் செய்யும் அழகிய விழாவினப் போன்றவன். அத்தகையகுகிய நீயும், நின் அத்தன்மையை ஒழித்துவிட்டு, நின்ளுேடு மாறுபட்ட பகைவருக்கு, ஊழிக் காலத்துச் சூரியரோடுங்கூடித் தோன்றும் ஊழிப்பெருந் தீயை ஒப்பவனுமாவாய்! அத்தகைய சினம் பொருந்திம தல்லவனே, நீ வாழ்க!

சொற்பொருளும் விளக்கமும் : இகல் - மாறுபாடு. படை கோள் படையெடுத்தல். சூழ்தல் ஆராய்தல். துணிதல் . செய்தற்கு முற்படல். வறிது - சிறிது. உடன் - பலரும் உடன்கூடி. காவல் எதிரார் . காத்தற்குரிய வலிமையற்ருர். கறுத்தோர் - பகைத்துச் சினங்கொண்டோர். திணை - குலம். முதல்வர் . முன்னேரான அரசர். ஓம்பினர். பாதுகாப் பாளராக விளங்கி; முற்றெச்சம். மன்பதை - நாட்டு மக்கள் கூட்டம். அறிவு - அறிவுரை. வலியுறுத்தும் - வலியுறுத்திக் கூறும். நன்று - நன்மை: அறம், சான்ருேர் - சான்ருண்மை யுடையோர்: அமைச்சர் 蠶 பண்பு இயல்பு. ம்டம் பெருமையின் - மடமை மிகுதியிஞலே.

துஞ்சல் உறுஉம் - இறந்துபடுதலைப் பொருந்தும். 'பகல்" என்றது ஊழிக்காலத்துப் பெரும்பகலே: மாலை என்றது அதன் இறுதிப் பொழுதை, 'ஊழி' என்பது அமிலத்தும் ஒடுங்குகின்ற சர்வசங்கார காலம். பொறை - பாரம். ஒரர்.அ நீெங்க; எச்சத் திரிபு. உரவுத்திரை - வலிய அலகள். கடுகிய . கடுமையோடும்.எழுந்து படர்கின்ற உருத்து எழு . சினங்கொண்டு எழுகின்ற வரையா- எல்லையறிய மாட்டாத. மாதிரம் . திசைகள். ஞாயிறு பட்ட - ஞாயிறு தோன்றிய. "அகன்று வரு' என்றது, பன்னிரு சூரியர் ஒக்கத் தோன்றித் தம் கதிர்கனை விரித்துப் பரந்து வருகின்ற வெம்மைய்ை. மடங்கல் தீ - கூற்றமாகிய கொடுந்தி: வடவைத்தி. அம் சாறு . அழகிய விழா. பிசிர் . துளிகள். 'பொங்கு பிசிர்’ என்றது ஊழி -வெள்ளத்தை வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை நுடங்கிய அழிக்க: செய்யிய என்னும்.வாய்பாட்டு வினை எச்சம்.

வடவைத்தீயை ஒத்த இரும்பொறை. சூரியர்களே யொத்த தன் படைத்தலைவரோடும் சென்று. பொங்கிப், பெருவெள்ளமாக் வரும் பகைவர்திரளே, ஒருங்கே அழிக்கும் tiல்லமையாளன் என்பதாம்;