பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

பதிற்றுப்பத்து தெளிவுரை

264 பதிற்றுப்பத்து தெளிவுரை

றனர். இரும்புலி - பெரிய புலி. பெருங்களிறு . பெரிய போர்க்களிறு. பொறி. கோடுகள். வயமான் . சிங்கம். சிங்கம் பெரும் புலியைக் கொன்றதாயினும், அதனுற் சோரிந்து களைத்துக் கிடந்துவிடாமல், அடுத்துவரும் பெருங்களிற் றையும் கொன்றுவிடும் ஆற்றலைப் பெற்றிருப்பது. அவ்வாறே பெருஞ்சேரலும் பகைவர்ை ஒவ்வொருவராக அழிக்கும் ஆற்றலையுடையவன் என்பதாம். அதஞற் சோர்வு கொள் ளான் என்பதும், வெற்றி அவனதேயாகும் என்பதும் இதல்ை அறியப்படும். பொலந்தார் - பொன்மாலை. இயல்தேர் . விரையச் செல்லும் தேர். வேந்தர் - சோழபாண்டியர். அறையுறு கரும்பு-அறுத்தலையுடைய கரும்பு; இதுதான் நெல் வயல்களில் பயிருக்கு இடையிடையே கிளைத்திருப்பதாகலின், நெற்கதிர் முற்றி விளைவதற்கு முன்பாக இக் கரும்புகளை அறுத்துவிடுவர் என்பதாம். பயிரின் அறுவடைக்குப் பின்னர் கரும்பு பயன்தரும். அப்படி விளையும் துணைப்பயிரான கரும்பின் மிகுதியை, அதன் சாற்றை வருவார்க்கெல்லாம் வரையாது கொடுக்கும் வளமைச் சிறப்பாற் கூறினர். இருக்கை - ஊர்கள்: இருப்பிடங்கள். வ்ன்புலம் - காட்டுப் பகுதி. மென்பால் . மருத நிலப்பகுதி. போரின் விகளவாலும் காப்பாரின்மையாலும் மென்புலம் வன்புலமாகத் திரியும் என்று கொள்ளுக. புல்லிகல் . சிறுசிறு சண்டைகள். நியமம் - கடைத்தெரு. ஒள்விலை என்று சொன்னது, கள்ளுக்கு உரிய விலையைக் கணக்கிட்டுத் தராமல், தம்பர்லுள்ள பொருளை அதற்குப் பன்மடங்கு அதிகமாகவே அள்ளித் தருதல். வெள் வரகு - வெள்ளை வரகு; வரகுத்தானியத்துள் இது ஒருவகை: இப்போது பரவலாகக் கிடைப்பது கேழ்வரகு இது கருஞ் சிறப்பு நிறமானது. கொள்ளுட்ைக் கர்ம்ப்ை - உன்னவாகக் கோள்ளுதலையுட்ைய காட்டுப்பகுதி நிலம்: தோற்ருேர் தம் மருதநிலத்து ஊர்களை விட்டகன்று காட்டுப் பகுதிகளிற் சன்று மறைந்து வாழும் புல்லிய வாழ்வினர் ஆவர். பாடல் சான்ற - புலவராற் பாடுதல் பொருந்திய வைப்பு - ஊர்.

இதனுற் பகையரசரது அழிவுகூறிப் பெருஞ்சேரலது வெற்றிச்சிறப்பை வியந்து உரைத்தனர். s

வேந்தர்' என்றது சோழ பாண்டியரையும், வேளிர்' என்றது ஐம்பெரு வேளிரையும், பிறரும்' என்றது. இவரல் லாத பிற குறுநிலத்தலைவர்களையும், வேற்று நாட்டரசர்களை யும் குறிக்கும் என்னவாம். o