பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g?& பதிற்றுப்பத்து தெளிவுரை

வெண்டலைச் செம்புனல், 8. கல்கால் கவணை, 9. துவராக் கூந்தல், 10. வலிகெழு தடக்கை.

பாடியவர் : ஆசிரியர் பெருங்குன்றார்க் கிழார். புரடப் பட்டோன்: இளஞ்சேரல் இரும்பொறை. பாடிப்பெற்ற பரிசில்: மருளில் இல்லார்க்கு மருளக் கொடுக்க' என்று, உவகை யின் முப்பத்தீராயிரங் காண்ம் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல் வரப் பரப்பி, எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொ பன்னுாமுயிரம் பாற்பட வகுத்துக், காப்பு மறம் தான் விட்டான் அக்கோ. இரும் பொறை அரசு வீற்றிருந்த காலம்: பதினறு ஆண்டுகள்.

தெளிவுரை : இன்னிசையாக முழங்கும் வெற்றிமுரசினைக் கொண்டவன் இளஞ்சேரல் இரும்பொறை என்பவன். இவன்முன் குட்டநாட்டு அரசகுடியினனை இரும்பொறைக் கும், மையூர் கிழான் மகளான வேண்மாள் அந்துவஞ் செள்ளைக்கும் மகளுகப் பிறந்தவன், -

பகைவருக்கு அச்சம்வரச் செய்தலையுடைய பெருந் சானையோடு, அவரையும் பகைவர்மேற் கடுஞ்சினம் கொள்ளச் செய்தவகை, அவரோடும் களத்தை நோக்கிச் சென்ருன். இருபெரு வேந்தராகிய பாண்டியரும் சோழரும், விச்சிக் கோமானும் வீழ்ச்சிபெறுமாறு, கடத்தற்கரிய காவற் காடுகளையுடையவும், மலையிடத்தவுமான அவர்க்குரிய ஐந்து கோட்டைகளையும் அழித்தவன்.

"பொத்தியார்' என்னும் புலவர் பெருமானைப் புரந்து வந்தோளுகிய கோப்பெருஞ் சோழனையும், போர்வித்தைகளை யெல்லாம் ஆள்பவன் என்னும் சிறப்புப் பெற்றவகிைய இளம் பழையன்மாறனையும், அவர்களுக்கு எதிராக வைத்த தனது வஞ்சினம் உண்மையாகுமாறு வெற்றிகொண்டவன்.

வெற்றியாற் பெற்ற செல்வங்களை எல்லாம் வஞ்சி மூதூர்க்கண்ணே கொண்டு சேர்த்து, அவற்றைப் பிறர்க்கும் உதவி மகிழ்ந்தவன். மந்திரங்களோடு வழிபாடியற்றும் மரபி னுக்கு இசையத் தெய்வங்களேயும் வழிபட்டவன்.

மெய்ம்மை பொருந்திய அமைச்சியல் மரபுகளில் வழுவாத வகிைய மையூர்கிழானக், குற்றமற்ற வேள்விகளியற்றும் புரோகிதளுக, அவரினும் சிறந்தோகை மாற்றியவன். அரிதான திறலைக் கொண்டதென்னும் மரபின உடையவும்,