பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

பதிற்றுப்பத்து தெளிவுரை

£06 பதிற்றுப்பத்து தெளிவுரை

நீரான் நிறைந்து விளங்கும் நிலை. வண்ணம் - அழகு; கார் வண்ணம். க்ருவி . தொகுதி, கமம் - நிறைவு. சிலேத்தல். முழங்குதல். நிவத்தல் - மேலெழல். காலை - கார்காலம், பொழுது - பருவம். புலம்பு - வருத்தம்.

பாய்ந்து இயல - பரந்து செல்ல, கடுமா - விரைந்து செல்லுங் குதிரைகள். நுட்ங்க . அன்சய், அதிர்வு நடுக்கம். வாயில் . இட்ம். வாயில் கொள்ளா - ஒரிடத்தில் நிலைகொள் ளாத. மைந்து - வலிமை. சுடர் வ்ரல் - ஒளியெறித்தல். மீகையர் . மேலெழுந்த கையினர். புகல் - விருப்பம். நாளும் - நாள்தோறும். நிறுமார் . நிலைபெறுத்தும் பொருட்டு ஏணி - எல்லை. அறை பாசறை.

நாடு - பகைவர் நாடு. அடிப்படுத்தல் - வென்று அடிமை கொள்ளல். கொள்ளே மாற்றல் - கொள்ளையிடல் என்னும் மரபின மாற்றல்; அடிப்பட்டபின் அந்நாடும் தனதாகவே யாதலின், அதனைக் காக்கும் கடமையோனும் தானே யாதலின், அந் நாட்டைக் கொள்.ாயிடல் பொருந்தாது என மாற்றினன் என்க. ஆயின் பகைவர் திறையளந்த பொன்னை மட்டும் கட்டிகளாக்கித் தன் படைமறவர்க்கு வழங்கின்ை என்க. கட்டளை தரம், வலித்தல் . ஆய்ந்து கூறல், புலம் - நாடு. بهr

முழவு - மத்தளம் , "பெரும்பழம்' என்றது பெரிதான பலாப்பழத்தை. மிசைந்து உண்டு. சாறு - திருவிழா. அயர்தல் - கொண்டாடுதல். கார் - கருமை. தூம்பு - மூங்கிற் குழாய். பழுனிய - முற்றிய தீம்பிழி. இனியர்கள். கண்ணி - தலைமாலை. கலிமகிழ். மிக்க மகிழ்ச்சி. ம்ேவார். பொருந்திய வராய். சுரும்பு - வண்டினம். பெயல் . மழை.

'பெருவாய் மலர்' என்றது இருவாட்சி மலரை. பசும்பிடி . பச்சிலைக் கொத்து: சண்ப்கக் கொத்தும் ஆம். நிறம் கரந்து' என்றது, பிரிவால் மாறுபட்ட தன் மேணிவண்ணத் தை மறைத்துக் கொண்டு என்றதாம். கதுப்பு - கூந்தல். 'ஒடுங்கீர் ஓதி' என்றது சுருளென்னும் தலையணியின. அணி கொளல் - அழகு கொள்ளல். குழை குண்டலம். நயவர். விருப்பம் உண்டாக, தகை. தகைமை மேம்பாடு. திரு முகம் - அழகிய முகம். மாள': முன்னிலையசை.

முனை - போர்முனை. முன்னிலைச் செல்லல் - முற்போத்து பணிந்து போதல், தூ - வலி. பெருஅ - வெற்றி பெரு.த.