பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பத்து

25

இரண்டாம் பத்து 25

விளக்கம் : முருகப்பெருமான் கடலிடைச் சென்று சூரனை அழித்த சிறப்போடு, சேரலாதன் கடலிடைச் சென்று பகைவர்ை வெற்றிகொண்ட சிறப்பையும் ஒப்பிட்டுக்கூறி மகிழ்கின்ருர் புல்வர். பலர் மொசிந்து ஓம்பிய கடம்பு' என்றது, பகைமறவர் மிகப்பலராகச் சூழ்ந்து நின்று கருத் தோடுங் காத்த கடுங்காவலையுடைய கடம்பு என்றதாம்: அதனை அழித்த சிறப்பு, சேரமானின் வெற்றியில் குறிப்பிட்டுப் பேசுதற்குரிய் புகழுடைய பெரு வெற்றி ய்ாயிற்று. f

"கடம்பின் பெருவாயில் நன்னன்' என்பான் வேறு, இக் கடம்பினைக் காவன்மரமாகக் கொண்டிருந்தார் வேறு. "கடம்பின் பெருவாயில்' என்பது ஒர் ஊர். சேரலாதனது கடலிடைப் பெற்ற இவ் வெற்றிச் செய்தியால், அந்நாளைத் தமிழரசர்கள் வலிமைமிக்க கடற்படையினையும் அமைத்துத் தமிழ்நாட்டைக் கடற் கொள்ளையரிடமிருந்து காத்து வந்தனர் என்பது விளங்கும்.

"பழிதீர் யானை' - களத்திற் பின்னடைந்தது என்னும் பழிச்சொற்கு உட்படாமல், முன்னேறிச் சென்றே வெற்றி ஈட்டிய வலிய போர்க்களிறு, போரடுதானை' எனச் சேரப் படைமறவரின் போர்மறிச் செவ்வியும் கூறப்பெற்றுள்ளது.

பலர் புகழ் செல்வம் ஆவது, அறநெறி பிழையாதே முயன்று ஈட்டிக் கொணர்ந்த செல்வம்: இங்கே அது பகை வரை முறையாக வெற்றிகொண்ட புகழையும், அவர்பால் திறையாகப் பெற்றவும், அவரிடமிருந்து கைப்பற்றிக் கொணர்ந்தவுமான பெரும்பொருளையும் குறிக்கும்.

"வடவிமயம் முதலாகத் தென்குமரி ஈருக இடைப்பட்டுக் கிடக்கும் இப் பாரதப் பெருநிலப்பரப்பு முழுமையுமே சேரலாதனின் பெரும்புகழ் பரவிநின்றது' என்பது, அந் நாளைத் தமிழ் அரசரின் போராண்மை மேம்பாட்டை எடுத்துக் கூறுவதுடன், அக் காலத் தமிழர் இந்நாவலந் தீவைத் தமக்குரிய தொன்ருகவே கண்டுவந்த மனப்பண்பை யும் காட்டுவதாகும்.

இவனது கடம்பறுத்து வெற்றிகொண்ட புகழ்ச் செயலினை அகநானூற்று 347ஆம் செய்யுளுள், மால்கடல் ஒட்டிக் கடம்பறுத்து இயற்றிய பண்ணமை முரசின் எனவும், சால்பெருந் தானைச் சேரலாதன்' எனவும் போற்றுவர் மாமூலனர். சிலப்பதிகாரத்து, இளங்கோவடிக ளாரும் இதனை வியந்து கூறியுள்ள்னர் (சிலம்பு 25 : 1).