பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

பதிற்றுப்பத்து தெளிவுரை

żëë பதிற்றுப்பத்து தெளிவுரை

வண்மையும் செம்மையும் சால்யும் மறனும் புகன்று புகழ்ந்து அசையா நல்லிசை 15 கிலந்தரு திருவின் நெடியோய், கின்னே!

தெளிவுரை : நின் மெற்கொண்ட பகையினது பெருமை காரணமாகத் தமக்கு நின்னல் யாதேனும் தீங்கு நேரற்கு அஞ்சியவரான நின் பகைவர்கள், தம் குல தெய்வங்களை வ பட்டு வேண்டிக் கொள்வர். நின் படைமறவர் அரிதாகத் தங்கியிருத்தற்கு அஞ்சாததும், ஆயின் நின் பகைவர் நெருங்கு தற்கு அஞ்சத்தக்கதுமான் பாச்றைக்கண்ணே நீயும் தங்கி யுள்ளன. அவ்விடத்தே பலவான கொடிகள் அசைந்தாடிப் பரந்தவண்ணம் உள்ளன. வலியோடு முன்னர்ப் பகைத் தெழுந்தாரது போர்களைத் தொலைத்த போர்வினைப் பயிற்சி யுடைய யானைகள், மதத்தினை ஒழுகவிட்டவாய்க், கடுஞ் சினம் மூளப்பெற்றவாய், வண்டினம் மொய்க்கும் சென்னி யினவாய்த், தத்தம் பிடிகளோடும் கூடியவாய்த் திரிந்து கொண்டிருக்கின்றன. நின் படைமறவர் மாறுபட்டு நிற் கின்றனர். நின் குதிரைப்படைகள் சேணமிட்டவையாய் நிற்கின்றன. நின் தேர்களில் கொடிகள் அசைந்தாடிப் பறந்து கொண்டிருக்கின்றன. கேடகங்கள் ஒன்ருேடொன்று உரைசுதலால் ஆரவாரம் எழுந்தபடி இருக்கின்றது. பகை வரின் காவற்காடுகளைச் சுட்டெரித்து நின் மறவர் குளிர் காய்ந்தபடி யுள்ளனர். இவ்வாறு நெடுநாட்கள் அவர்கள் பாசறையிலே இருந்து வருகின்றனர். இத்தகைய நாட்களும் பன்னளாகக் கழிந்து கொண்டிருக்கின்றன.

நின் புகழைப் பாடி வருவோரான பாணரும் புலவரும் தாமாகவே வேண்டுமளவு எடுத்துக்கொண்டு போகப்போக வும் குறையாத செல்வத்தை உடையோனே! நின்னைச் சினந்து வந்தோர் போரிடையிற் கொல்லக் கொல்லக் குறை யாது மீளவும் பெருகும் படைப்பெருக்கினை உடையோனே! நின் கொடையினையும், செம்மையினையும். பிறவான சால்புகளையும், மறமேம்பாட்டையும் விரும்பிப் புகழ்ந்து, சான்ருேர் நாளும் போற்றுதலில் குறைவுபடாத நற்புகழைக் கொண்டோனே! நிலம் தருகின்ற திருவினைக் கொண்ட நெடியோளுகிய திருமாலைப் போன்ருேனே! நின்னைப் பாடிக்’ காண்பதன் பொருட்டாக, யானும் வந்தனென் பெரும்ானே!

சொற்பொருளும் விளக்கமும் : .ெ ப. ரு ைம . மிகுதி. தெய்வம் . வழிபடு தெய்வம். செப்ப தம்மைக் காக்குமாறு