பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

பதிற்றுப்பத்து தெளிவுரை

292 பதிற்றுப்பத்ததெளிவுரை

துடக்கம் - அசைவு. பல்மா - பலவான குதிரைகளும் யான்ைகளும். புலம் - பகைப்புலம். வார்முகில். நெடிய கரு மேகம்: தோற்றத்தாலும் முழக்கத்தாலும் களிறுக்குஉவமை. மழக்களிறு . இளம்பருவத்து ஆண் யானைகள். கால் கவர் . கர்லால் அகப்படுத்தப்பெற்ற. உய்தல் . பிழைத்தல். உடற்றி யோர் . போரிடத் துணிந்த பகைவர்.

நின்னே எதிர்த்த பகைவர் மழகளிற்றின் காலிடை அகப்பட்ட மூங்கில்போலக் கிளையோடும் அழிந்து போவர் என்பதாம். இதனை அறிந்தும், அவர்கள் நின்னைப் பணிந்து போகாதிருக்கின்றனரே என்றதுமாம். 'உய்தல் யாவது' என்றது, அழிதலின் உறுதிபற்றிக் கூறியதாம்.

'தண்ணுமை ஒரு வகை முரசம்: மத்தளம் என்பர். ஆர்ப்பு - ஆர்ப்பு ஒலி, நுவல-சொல்ல; சொல்வது போர்க்கு எழுமின் என்பது. நோய்த்தொழில் - துன்பந்தரும் தொழி லாகிய போர்த்தொழில்: போரிடும் இருசாராருக்கும் துன்பந் தருவதாகலின் நோய்த் தொழில் என்றனர். ஈண்டு - பெருகிய மைந்தர் - வலிமையுடையரான வீரர். முனே. போர்முனை. புகல் - விரும்புகின்ற புகல்வின் - விருப்பத் தையுடைய உரும் இடி. எறி - தாக்கிய, காஞ்சி - நிலை யைாமைபற்றிய சிந்தன. இதனைப் போர்க்களத்து வீரருக்கு ஏற்றிக் கூறினர். குரை - ஆரவாரம். குவவு - வீரர் கூட்டம். இருக்கை - இருப்பு, மாரி - மழை. காலே காலம். மழை பெய்யத் தலைப்பட்டதும் புள்ளினங் களிப்பால் ஆரவாரித் தாற்போல், வெற்றி கொண்ட வீரர்களும் கூடி நின்று ஆர்ப்பரித்தனர் என்க. جد

85. நாடுகாண் நெடுவரை !

- துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணம், தூக்கு : செந்தூக்கு, இதற்ை சொல்லியது இரும்பொறையின் முன்னேரது கொடைச் சிறப்போடு சேர்த்து, அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறு ஆம்.

(பெயரும் விளக்கமும் : தன்மேல் ஏறிநின்று நாட்டைக் கண்டு இன்புறுவதற்கு ஏதுவாகிய உயர்ச்சியுடைய மலை என்றதன் சிறப்பால் இப்பெயரைத் தந்தனர்.)

நன்மரம் துவன்றிய காடுபல தரீஇப் பொன்னவிர் புனேசெயல் இலங்கும் பெரும்பூண்