பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 . பதிற்றுப்பத்து தெளிவுரை

கடுங்கோ வாழியாதனைப் பாடினர். அவன் அவருக்கு நன்ரு' என்னும் குன்றின்மீது ஏறி நின்றவளுகத், தன் கண்ணிற் கண்ட ஊர்களை எல்லாம் வழங்கினன். அவன் வழங்கிய தற்ை கபிலன் பெற்ற ஊர்களிலும் பலவாக, நின் பகைவர் நினக்குத் தோற்று நிலத்திலிட்ட வேல்களும் விளங்கினவே!

  • சொற்பொருளும் விளக்கமும் திணை - குலம். முதல்வர். முன்னேர்: குலத்து முன்னேர். திருமா மருங்கு பெருவளங் கொண்ட மலைப்பக்கங்கள். கோடு - மலையுச்சி; சிகரம். நறவு - ஒருபூ சூடா நறவு - நறவு' என்னும் ஊர். நறவு - கள்ளும் ஆம்; அப்போது கள்ளையுடைய நாள்மகிழ் இருக்கை என்க. அரசவை பணிய - அரசும் அவையும் பணிந்து போற்ற புரிதல் - விரும்பிச் செய்தல். வயங்குதல் . விளங்குதல்.

அறம் புரிந்து மயங்கிய மறம்புரி கொள்கை' என்ப்தற்கு அறத்தின்மாறுபட்டாரை அழித்து மறச்செயலாற்றும்கோட் பாட்டினல் அறநெறி நிலைநிற்கச் o விளங்கிய தன்மை எனவும் பொருள் கூறலாம். கொள்கையைப் பாடிய கபிலன் என, இப்புகழைச் செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு ஏற்றியும் கூறலாம். உவலை - இழிவு. கூர்தல் - மிகுதல். நனவின் - மெய்யாக.

இளஞ்சேரவிரும்பொறை சென்னியர் பெருமான வென்று வருக வென்று ஏவினன். அவன் படையெறிந்து ஆற்ருது சோழப் படையினர் களத்திற் படையெறிந்து ஒடினர். அவர் அவ்வாறு போட்டுச்சென்ற வேலின் அளவு, செல்வக்கடுங்கோ தன்னைப் பாடிய கபிலனுக்கு வழங்கிய ஊரினும் பலவாகும் என்பதாம்.

86. வெங்திறல் தடக்கை !

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு செந்தூக்கு. சொல்லியது : இளஞ்சேரலிரும்பொறையின் போர் வன்மையும், மென்மை யும்.

(பெயர் விளக்கம் : உறல் உறு குருதிச் செருக்களம் புலவக்கொன்று, அமர்க் கடந்து' என்னும் முன்நின்ற அடைச் சிறப்பாலும், கையினை வெந்திறல் தடக்கை எனச் சிறப் பித்துக் கூறியமையானும், இப் பாட்டிற்கு இப் பெயரைத் தந்தனர்.)