பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாம் பத்து

301

ஒன்பதாம் பத்து 30 I

பூத்து இதழ் விரிந்துள்ளதுமாக விளங்கும், வானத்தைத் தொடுவது போன்ற உயர்ந்த சிகரங்களினின்றும் வீழ்கின்ற அருவியானது, அரிய மலைப்பக்கத்தே வீழ்வதுபோல மார் பிடையே ஒடியபடியிருக்கும், நெடுந்துாரம் விளங்கித் தோன்றும் நல்லபுகழையுடையவள். நின் தேவி. அச்சேயிழை யாளின் கணவனே!

மிக்க காற்ருனது எழுப்பிய, உயர்ந்து வருதலையுடைய அலையானது, நுண்மணல் பொருந்திய அடைகரையிடத்தே சேர்ந்து சிறுதிவலைகளாக உடைந்து போகின்ற தன்மையினை யுடைய, குளிர்ச்சி கொண்ட கடற்பக்கத்தையுடைய நாட்டின் தலைவனே! நின்னை நின் அரண்மனையிற் காணுதே, நின்னைக் காணும் பொருட்டாக இப் பாசறையிடத்தேயும் யான் வந்துள்ளேன்! அவள்பாற் சென்று அவளுக்கு உதவு வாயாக! "எட்டுத் திசையும் ஒளிபெற்று விளங்கப் பெரிய வானிடத்தே உயர்ந்து செல்லும் ஞாயிற்றைப்போல, நீயும் பலகாலம் சிறப்போடும் விளங்குவாயாக!

சொற்பொருளும் விளக்கமும் : மலர்தல் - புதுமலர்ச்சி பெறுதல்; வளமுறுதல். தொழில் . அரசுத் தொழில்: அது செம்மையின் வழுவாது ஆட்சி நடாத்தல். 'கடவுள்' என்றது விந்தா தேவியை இவள் துர்க்கை. கல் - மலே. தெண்கடல் - தெளிந்த கடல். வளைஇய - சூழ்ந்த மலர்தலே உலகம் - பரந்த இடத்தையுடைய உலகம்; வடதிசைக்கண் விந்திய மலை உயர்ந்து நிற்கவும், முப்புறமும் கடலாற் சூழப் பட்டிருக்கவும் விளங்கும் தென்னிந்தியப் பகுதியைக் குறித்தது. பெயர் போகிய - புகழ் பரவிய ஒன்ஞர் - பகைவர். துவங்கல் - அசைதல். குட்டம் - கடல். தொலைய. கெட: இது கடற்கொள்ளையரை வென்றதைக் குறித்தது: கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்பதும் நினைக்க. அணங்கு - வெற்றித் தெய்வம். கடம்பு - கடம்பர்க்குரிய காவன் மரம், கடம்பறுத்தவன் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் என்பர் (பதிற். 2 : 12-13). பொருமுரண். போர் , செய்வதற்குரிய வலிமை. கழுவுள் - காமூர்க்குரிய இடையர்குடித் தலைவன். நாம் - அச்சம்.துணிய, துணிபட அண்டர்-இடையர்: இவரை ஒட்டியவன் பெருஞ்சேரல் இரும் பொறை. வாகை - நன்னனின் காவன் மரம்; நன்னனே அழித்தவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல். அயிரை. அயிரை மலையிலுள்ள கொற்றவை; இவளைப் பரவியவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன். பின்வருதல் . பணிந்து