பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 10 பதிற்றுப்பத்து தெளிவுரை

யதும், அழகிய கவரிமயிராலாகிய குச்சியை அணிந்துள்ளது மான, பாய்ந்து செல்லும் போர்க்குதிரைமேல் ஏறிக்கொண் டவணுகக், காம்பையுடைய வேலைப் பிடித்துப் பகைவரை நோக்கிச் செலுத்தி, அவருக்குத் துன்பஞ் செய்தலிலே விருப்பமும், நீங்காத போராண்மையும் கொண்டவனே! நிலையாமைய்ை நன்கறிந்த மறவர்களின் பெருமானே! மிக்க பெருஞ்சிறப்பிளுலே ஓங்கும் புகழினை உடையோனே!

வயல்களை உழுகின்றவரான உழவர்கள் தண்ணுமைப் பறையை முழக்கிஞல், அதனை மேகத்தின் இடிமுழக்கமாகக் கொண்டு மருதநிலச் சோலையிலுள்ள மயில்கள் ஆடத் தொடங்கும். குளிர்புனலிலே ஆடிக்களிப்போரது ஆரவாரத் தோடு கலந்தாற்போலக் கொடும்போரைச் செய்யும் படை மறவரது தெளிந்த ஒசைகொண்ட கிணைப்பறையும் சேர்ந்து முழங்கும். செல்வம் பொருந்திய நல்ல வீடுகளிலேயுள்ன் ஆணேறுகள் ஒன்ருேடொன்று மாறுபட்டு முழக்கமிட்டிருக் கும். செழுமையான பலவகை நலங்களும் நிலையாகவிருந்த, கொழுமையான பல குளிர்ச்சியான வயல்களைக் கொன்ட காவிரியாற்றின் பக்கங்களைக்கொண்ட நல்ல சோளுட்டைப் போன்றவள்; அழகு பொருந்திய, உள்ளிடு புரல்கள் அமைந்த சிலம்புகளையும், அடக்கமான கொள்கைகளையும், அறக்கிற் பினையும், தெளிவான நற்புகழையும் கொண்டவள்; வண்டு மொய்க்கும் கூந்தலையும், ஒளிபொருந்திய வ&ர்களையும் கொண்டோளான நின் சேரன்மாதேவி. அவளின் கணவனே!

போர்க்களத்தே பகைவரினும் மேம்பட்டு இடிபோல முழங்கும் வெற்றி முரசத்தையும், பெரியவான நல்ல யானைப் படையினையும், தலைமைக்குரிய உரிமையினையும் உடை யோனே! நின் வாளுளின் ஒவ்வொரு நாளும், மாதத்தை யொத்த காலவளவினை உடையதாகுக! நின் வாளுளின் ஒவ்வொரு மாதமும் யாண்டை யொத்த காலவள்வினை உடையதாகுக! o

அந்த ஆண்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் ஊழிக் காலத்தின் அளவினை உடையனவாகுக! அவ்வூழிசள் ஒவ் வொன்றும் வெள்ளம் போன்ற கால்வரம்பின் உடைய்ன வாகுக!” என நினைந்து வாழ்த்தியபடியே, நின்னைக் காண்ப தற்கென யானும் வந்துள்ள்ேன், சேரமானே!