பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்தைப் பாடிய சான்ருேள்

பதிற்றுப் பத்தைப் பாடிய சான்ருேர்கள் பதின்மர். எனினும், காலக்கொடுமையால் காணுதே போயின முதல், பத்து ஆகிய புத்துக்களோடே அவற்றைப் பாடிய சான்ருேர் களின் பெயர்களும் அறியவியலாதே மறைந்து போயின. இரண்டுமுதலாக ஒன்பது முடியவுள்ள பத்துக்களைப் பாடியோ ராகப் பதிகத்தால் அறியப்படுகிறவர்கள் எண்மர். அவர்கள், முறையே குமட்டுர்க் கண்ணனரும், பாலைக் கோதமகுரும், காப்பியாற்றுக் காப்பியருைம், பரணரும், காக்கைப் பாடினியார் நச்செள்ளையாரும், கபிலரும், அரிசில்கிழாரும், பெருங்குன்றுார் கிழாரும் ஆவர். இவர்களைப் பற்றிய குறிப்புக்களை மட்டும் நாம் இங்கே காண்போம். இவர்களின் விரிவான வரலாறுகள் ஆராய்தற் குரியனவாகும்.

1. குமட்டுர்க் கண்ணஞர்

இவர் பாடியுள்ளது இரண்டாம் பத்து. இவராற் பாடப்பெற்றவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவன் இவருக்கு அளித்த பரிசில் வியத்தற்கு உரியது. உம்பற் காட்டுப் பகுதியிலுள்ள ஐந்நூறு ஊர்களைப் பிரமதாயமாக அளித்ததுடன், அவனது நாட்டுப் பகுதியுள் தென்குட்டின் கண்ணிருந்து வந்த அரசிறை வருவாயினும் பாகம் கொடுத் தானம் அவன்."

'குமட்டுர்’ என்னும் ஊரினர் இவர். இவர் பெயர் கண்ணனர். குமட்டுர் என்பது பண்டைத் தமிழகத்து ஊர் களுள் ஒன்று. இந் நாளிலே, இப் பெயருடையதான ஊர் எங்கணும் காணப் பெறவில்லை. *

'குவடு என்பது மலையுச்சியைக் குறிக்கும் சொல். குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த ஊரான குவட்டுர் என்பதே இவ்வாறு குமட்டூர்' எனத் திரிந்தது என்பர் சிலர்.இவர் ஓய்மாநாட்டுக் குமட்டுரினர் என்று பேருரையாசிரியாான ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் கூறுவார்கள். சங்கநூற் களுள் இவர் பாடியவையாக வருவன இப் பத்துப் பாட்டுக் களே. யாகும்.