பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

பதிற்றுப்பத்து தெளிவுரை

28 பதிற்றுப்பத்து தெளிவுரை

காணுதல் வேண்டும் என்னும் விருப்பத்தையே யாமும் அடைந்தோம்.

உதிராத பசிய மயிரையும், இளமைப் பருவத்தையும், அசைந்தசைந்து. செல்லுகின்ற தளர்ந்த நடையினையும், தலைமைப் பாட்டினையும் கொண்டதான தன்னுடைய இளங்களிறு, ஒழுகும் மதநீரோடே நிற்பதனைக் கண்ட கன் ருேடும் சேர்ந்தபடியே நின்ற அதன் பிடியானது, குன்றிடத் தேயுள்ள மணங்கமழும் க்ாட்டு மல்லிகைக் கொடியைப் பிடுங்கி, அம் மதநீரிலே மொய்த்த வண்டினங்களை ஒட்டிய படியே இருக்கும். அத்தகைய குன்றுகள் பலவற்றையும் கடந்து, இவ்விடத்தே நின்னைக் காணக் கருதினமாக யாமும் விரும்பி வந்தடைந்தோம்.

நின் வஞ்சிநகரின் ஒரு பக்கத்தேயுள்ள அவ்விடத்தே பர்ம் வந்து தங்கியதும், எம் மிகப்பெரிய சுற்றத்தினது, தொல்பசியாலே வருந்திய வருத்தமெல்லாம் அடியோடே வீழ்ந்துபட்டது. வாள் புகுந்து அறுத்த, வெள்ளிய நிணமான கொழுத்த ஆட்டிறைச்சியின் தசைத்துண்டங்களை இட்டுச் சமைத்த, வெண்ணெல் அரிசியிஞலே ஆகிய வெண்சோற்றை யும், அரும்பினலே அமைத்த கள்ளின் தெளிவையும், யாங்கள் எல்லாம் நிரம்ப உண்ணுமாறு நீயும் செய்தன.

பருந்தினது நனைந்த பெருஞ்சிறகைப் போல்க் காணப் பெற்றதும், மண்ணுலே தின்னப் பெற்றுச் சிதைந்ததும் ஆகிய, கந்தல்பட்ட எம் உடைகளைக் களைந்துவிட்டு, நூலாக் கலிங்கமாகிய பட்டாடைகளைத் தம் வெள்ளிய அரையி னிடத்தே, எம் சுற்றத்தார் கொளுவிக் கொள்ளுமாறும் செய்தன!

இருண்ட கடைசுருண்டு விளங்கும் கூந்தலையும், வளைந்த மூங்கிலைப்போல விளங்கும் மென்மையான தோள்களையும் கொண்டோரான, குற்றமற்ற பாண்மகளிர் எல்லாரும் ஒளி விளங்கும் அணிகலன்களையும் அணிந்திருப்பார் ஆயினர்!

உடலோடே சேர்த்துக் கட்டி வைத்தாற்போலே, என்பால் விருப்போடு என்னைப் பிரியாதேயே உடன்வரும் பாண் சுற்றத்தோடுங்கூடி நின்றவகைப், பேராரவாரத்தை உடையதாகிய நினது திருவோலக்க இருக்கை' என்னும் மகிழ்ச்சியான காட்சிதானும், இப்போது கண்ணுரக் கண்டு நுகருதற்கும் எமக்கு மிகமிக இனிதாயிருக்கின்றது, பெருமானே! *