பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

பதிற்றுப்பத்து தெளிவுரை


இவன் காலத்தே சேரநாட்டின் பெரும்புகழ் இந் நாவலந் தீவு முற்றவும் பரவியிருந்தது. இதனைப், பேரிசை இமயம் தென்னங் குமரியோ டாயிடை, மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்து' என, இவர் கூறுகின்ற சேரலாதனின் மறமாண்பி ேைலயே நாம் அறியலாம்.

பகைவரை வென்று, தன் வஞ்சிநகரத்தே வெற்றியுலா வருவோகிைய இவனைச், சூரனை வென்ற முருகன் வந்த வெற்றியுலாவோடு உவமித்துப் பாராட்டுகின்ருர் இவர். போர்க்களத்தை நேரடியாகக் கண்டு, அதன் அழிபாட்டு மிகுதியை நோக்கி வருத்தமும், மறமாண்பை எண்ணிப் பெருமிதமும் கொண்டவர் இவர். இதனை, "அருநிறம் திறந்த புண்உமிழ் குருதியின், மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து மலைக்கலவை போல ஆயிற்று எனவரும் உவமை விளக்கும். வேந்தர்க்கு உரியவான பலவகைச் செல்வங்களுள்ளும், பகை யழித்துப் பெறப்படும் வெற்றியாகிய புகழ்ச்செல்வமே சிற்ந்ததாகும் என்பதனை, பலர் புகழ் செல்வம்' எனக் கூறுவர் இவர்.

இமயப் பகுதியிலே அந்நாளிலே வாழ்ந்த ஆரியவரசர் பற்றியும், ஆரிய முனிவர்கள் பற்றியும் அறிந்தவர் இவர். சேரலாதனின் மறமாண்பை வியப்பவர், 'அரிமான் வழங்கும் சாரல் பிறமான் தோடுகொள் இனநிரை நெஞ்சதிர்ந்தாரும்' எனச் சேரலாதனைச் சிங்கவேற்றுக்கும், அவனைப் பகைத்த பிற மன்னரைப் பிறபிற விலங்கினங்கட்கும் ஒப்பிட்டுக் காட்டுவது நயம் மிகுந்ததாகும்.

சேரலாதனது வள்ளன்மையை விளக்குய்வர், வறுமைப் பட்ட ஒரு இரவலர் கூட்டம் எவ்வாறு புத்தழகும் புது வளமும் பெற்று விளங்கிற்று' என, வந்தவண் இறுத்த இரும்பேர் ஒக்கல்...............வசையில் மகளிர் வயங்கிழை அணிய' என எடுத்துக் காட்டுவதன்மூலம் உணர்த்துகின்ருர்.

வளமையை உணர்த்தும் சொன்னயத்திலும், அதுதான் அழிவெய்திய கொடுமையைக் காட்சிப்படுத்தும் சொல் ல்ோவியத்திலும், இவரது செய்யுட்கள் தனித்தன்மையோடு மிளிர்கின்றன.

நோயொடு பசியிகந்தொரீஇப் பூத்தன்று பெரும நீ

காத்த நாடே எனச் சேரலாதனின் நல்லாட்சியைப் போற்றுகின்ற இவர், நாட்டை ஆள்வார்க்குரிய கடமைகள்ை