பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

பதிற்றுப்பத்து தெளிவுரை

320 பதிற்றுப்பத்து தெளிவுரை

இவரது செய்யுட்களுள் காணலாம். மேலும், இவர் தம் செய்யுட்களை அந்த்ாதித் தொடையாகவும் அமைத்துப் பாடி யுள்ளனர்.

'நார்முடி’ என்பது எப்படி இருந்தது என்பதையும் இவர் நயமாக ஒவியப்படுத்திக் காட்டுகின்ருர். அலந்தலே வேலத்து உலவை அஞ்சினைச் சிலம்பி கோலிய அலங்கற் போர்வையின், இலங்குமணி மிடைந்த பசும்பொன் படலத்து, அவிரிழை தைஇ மின்னுமிழ்பு இலங்கச் சீர்மிகு முத்தந் தைஇய நார்முடிச் சேரல்' என்பார் இவர். -婚

'பனைதடி புனத்தின் கைதடிபு பலவுடன் யானைபட்ட வாள் மயங்கு கடுந்தார்' என்பது போன்ற போர்க்கள உவமை நயங்களையும் இவர் செய்யுட்களுள் காணலாம்.

படைஞரின் கடமையை நகைவர்க்கு அரணமாகிப் பகைவர்க்குச் குர்நிகழ்ந் தற்று நின் தானை' என்பதளுல் மிகமிக அருமையாக உரைப்பார் இவர்.

நார்முடிச் சேரலின் நல்லியல்புகளையும், மறமாண்புகளை யும் பிறசிறப்புக்களையும் இவர் வியந்துபோற்றும் நயம் கற்று இன்புறற்கு உரியதாகும்.

இவ்வாறு சீரோடு செய்யுள் செய்து போற்றி வாழ்த்திய காப்பியனர்க்கு அச் சேரலும், நாற்பது நூருயிரம் பொன் னும் தான் ஆள்வதிற் பாகமும் கொடுத்துச் சிறப்பித்தான் என்பது வரலாறு.

4. பரணர்

இவர் கபில பரணர் எனச் சான்ருேராற் போற்றப் பெறுகின்ற சால்புடைய இருவருள் ஒருவர். இவராற் பாடப் பெற்ருேன் சேரன் செங்குட்டுவன். இவர் பாடியது ஐந்தாம் பத்து. இவர் செய்யுட்கள் பலவும் வரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றை நமக்கு உணர்த்துவன. அகநானூறு, குறுந் தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய பிற சங்க நூற்க்ளி லும் இவர் செய்யுட்கள் நிரம்பக் காணப்படும்.

அகத்துறைச் செய்யுட்களில் இவர் வடித்துக் காட்டும் உயிரோவியங்களும், உவமைச் செறிவுகளும், காட்சிக் கவின் களும் அளவிலவாகும். இவர் வரலாறும் புலமைநலமூம் தனிநூலாக எழுதிக் காணும் அளவுக்குச் சுவையும் சிறப்பும் உடையதாகும். ஏறக்குறைய எழுபதுக்கும் மேற்பட்ட பழந்