பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பதிற்றுப்பத்தின்
சேரமன்னர்கள்


பதிற்றுப்பத்தில் இரு குடும்பத்தைச் சார்ந்த சேரவரசர் களின் புகழ்ப் பாட்டுக்க்ளைக் காண்கின்ருேம்.

(ԱԲ5 ற்குடும்பத்தினர் சேரமான் உதியஞ் சேரலாதனும் அவன் வழியினருமாவர்;ஒன்று முதலாக ஆரும்பத்து முடிய இவர்களைப் பற்றிய பாட்டுக்கள் வருகின்றன.

இரண்டாம் குடும்பத்தினர் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழியினர். இவர்கள், 7, 8, 9, 10 ஆம் பத்துக்களின் பாட்டுடைத் தலைவர்கள் ஆவர்.

முன்னும் பின்னுமாக அமைந்த இந்த வரிசை முறை தாலவமைதியை ஒட்டியது அன்று முதற்கண் ஒரு குடும்பத் இனரைப் பற்றிய பத்துகளையும், அடுத்து அடுத்த குடும்பத் தினரைப் பற்றிய பத்துகளையும் தொகுத்துள்ளனர்.

இதல்ை, அந்நாளையச் சேரமன்னர்கள் இருகுடும்பத்தா ராக விளங்கி வந்தனர் என்பதும், இருசாராருமே சுதந்திர மான அரசர்களாக விளங்கிவந்தனர் என்பதும் அறியப்படும். முதற்கண் குறிப்பிடப் பெறுவோர் தலைமைக் குடியினர் எனவும், பிற்பட்டுக் குறிப்பிடப் பெறுவோர் கிளைக்குடியினர் எனக் கொள்வதும் ஒருவாறு பொருந்தக் கூடியதே.

இனி, இவர்களைப்பற்றிய வரலாறுகள் மிகவும் விளக்க மாக எழுதப் பெறுவதற்கு உரியன ஆதலால், இங்கே சுருக்க மாகச் சில குறிப்புக்களை மட்டும் இந்நூலினை யொட்டிக் காண்போம்.

1. சேரமான் உதியஞ் சேரலாதன்

இவன் பெயர் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்

சேரலாதன் எனவும் வழங்கும். இவனைப் பாடியவர்கள் மாமுலஞரும், முரஞ்சியூர் முடிநாகராயரும் ஆவர். இவன்