பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

பதிற்றுப்பத்து தெளிவுரை

328 பதிற்றுப்பத்து தெளிவுரை

பாரதப் போரின்கண் இருதிறத்துப் பெரும்ப்டையணிகட்கும் பெருஞ்சோறு அளித்துப் புகழ்பெற்றவன் என்று குறிப்பிடு வர். ஒரைவர் ஈரைம்பதின்மர் உடன்று எழுந்த போரில் பெருஞ்சோறு போற்ருது தானளித்த சேரன்' என்று இளங் கோவடிகள் இவன் சிறப்பைச் சிலப்பதிகாரத்துக் கூறுகின் றனர். "ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்' எனப் புறநானூற்றுச் செய்யுளும் (2) கூறுகின்றது. இவனை, "ஐம் பெரும் பூதத்து இயற்கை போலப், போற்ருர்ப் பொறுத் தலும், சூழ்ச்சியது அகலமும், வலியும், தெறலும், அளியும் உடையோன்' என்பர் முரஞ்சியூர் முடிநாகராயர். மறப் படைக் குதிரை மாரு மைந்தின் துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றே, இரும்பல் கூளிச் சுற்றம் குழி) இருந் தாங்கு' என, இவன் வழங்கிய பெருஞ்சோற்றை உயிரிழந்த முன்னேர் பொருட்டர்கத் தெய்வங்கட்கு இடுகின்ற படையலாகக் கூறுவர் மாமூலஞர் (அகம், 333). இவன் தேவி வெளியன் வேண்மாள் நல்லினி. இவர்களுக்குப் பிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - இரணடாம் பத்திற்கு உரியவன். உதியஞ்சேரலுக்கு உரிய முதற்பத்து கிடைக்கப் பெறவில்லை; பாடிளுேர் பெயரும் அறியப்பட வில்லை. நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல்' (அகம். 65) என, இவன் சேரநாட்டை விரிவுபடுத்தியதனையும் பாமூலனர் கூறுவர். ‘வானவரம்பன் வெளியதது. அன்ன என வருவ தளுல் (அகம். 359) வெளியம் சேரநாட்டினர்க்குச் சில காலம் உரித்தாயிருந்ததும் அறியப்படும்.

2. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

இவனை ஆசிரியர் குமட்டுர்க் கண்ணனர் இரண்டாம் பத்துச் செய்யுட்களால் போற்றிப் பாடியுளளனர். இவன் உதியஞ் சேரலுக்கும் வெளியத்து வேண்மாள் நல்லினிக்கும் பிறந்த மகன். 58 ஆண்டுகள் அரசுவீற்றிருந்து மறப் பண் போடும், பிற சிறப்போடும், நாடும நல்லோரும் போற்ற வாழ்ந்தவன் இவன். இவன் உடன் பிறந்தவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன். இவன் மக்கள் களங்காய்க் கணணி நார்முடிச் சேரல். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய மறமாண்பினர்

ஆவர்.

4